முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / கேஸ் வேணுமா..? கேஸ் இருக்கு.. ஜெயில் வேணுமா..? ஜெயில் இருக்கு... தஞ்சை போலீசாரின் நூதன விழிப்புணர்வு!

கேஸ் வேணுமா..? கேஸ் இருக்கு.. ஜெயில் வேணுமா..? ஜெயில் இருக்கு... தஞ்சை போலீசாரின் நூதன விழிப்புணர்வு!

தஞ்சை போலிசாரின் எச்சரிக்கை பதிவு

தஞ்சை போலிசாரின் எச்சரிக்கை பதிவு

வாரிசு படத்தின் தயாரிப்பாளரை போல இன்றைய இளைஞருக்கு ஏற்ற வகையில் எச்சரிக்கை செய்த தஞ்சாவூர் போலிசார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு இன்றைய ட்ரெண்டில் தஞ்சாவூர் போலீசார் எச்சரிக்கை செய்யும் வகையில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளனர். வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில், அந்த படத்தின் தயாரிப்பாளர் விஜய் ரசிகர்களுக்கு எதுவெல்லாம் வேண்டுமோ அதுவெல்லாம் படத்தில் இருக்கிறது என கூறினார். அவர் பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

தற்போது அதே டெம்ப்லேட்டை பயன்படுத்தி, தஞ்சாவூர் போலீசார் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களிடம், கேஸ் வேணும..? கேஸ் இருக்கு.. ஃபைன் வேணுமா..? ஃபைன் இருக்கு. ஜெயில் வேணுமா..? ஜெயில் இருக்கு.. கடைசியா உங்க வங்கி கணக்கை முடக்கனுமா..? அதுவும் இருக்கு என்ற விழிப்புணர்வு பதிவை ஷேர் செய்துள்ளனர். இது பொங்கல் ஆஃபர் என ஷேர் செய்த தஞ்சாவூர் போலிசார் போதைக்கு எதிராக இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றவாறு விழிப்புணர்வாக பதிவு செய்துள்ளனர்.

First published:

Tags: Drug addiction, Police, Tamilnadu police, Thanjavur, TN Police