முகப்பு /செய்தி /Thanjavur / நரிக்குறவர் என்பதால் பேருந்தை நிறுத்த மறுப்பதா? சிறைபிடித்த பொதுமக்கள்

நரிக்குறவர் என்பதால் பேருந்தை நிறுத்த மறுப்பதா? சிறைபிடித்த பொதுமக்கள்

பேருந்து மறியல்

பேருந்து மறியல்

50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பேருந்தில் பயணித்து பள்ளிக்கு சென்றுவரும் சூழலில் நரிக்குறவர் பேருந்து நிறுத்தம் என்பதால் அரசு பேருந்துகள் புதுக்குடி பேருந்து நிறுத்தத்தில் நிற்பது இல்லை என்று கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நரிகுறவர் பேருந்து நிறுத்தம் என்பதால்,  அரசு பேருந்தை நிறுத்த மறுப்பதாகவும், இதனால் மாணவர்கள் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக கூறி பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் புதுக்குடி அருகே அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நரிகுற மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று தொடர்ந்து இப்பகுதி புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் பள்ளிகூடங்கள் இல்லாததால் அருகில் உள்ள ராயன்பட்டி, மலையேறிபட்டி கிராமங்களில் உள்ள பள்ளி கூடங்களுக்கு  இங்குள்ள மாணவர்கள் சென்று படித்து வருகின்றனர்.

சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஐந்து கிலோமீட்டர் தூரம் உள்ள பள்ளிக்கு அரசு பேருந்தில் தினமும் சென்று வருகின்றனர். இந்நிலையில் இத்தடத்தில் இயங்கும் அரசு பேருந்துகள், நரிகுறவர் பேருந்து நிறுத்ததில் மட்டும் பேருந்தை நிறுத்த மறுப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் அன்றாடம் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள் பாதிக்கப்படுவதாக குற்றம்ச்சாட்டி, பள்ளி மாணவர்கள் உட்பட 50 க்கும் மேற்ட்டவர்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்தை நிறுத்ததாத ஓட்டுநர், நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: கூகுள் பே கொள்ளையர்கள்.. ஆவடியில் லிப்ட் கேட்பது போல் இளைஞரை தாக்கி கைவரிசை

First published:

Tags: Bus, Thanjavur