Home /News /thanjavur /

Thanjavur | மரச் செக்கு எண்ணெய், இயற்கை தானியங்கள் மட்டுமே பயன்படுத்தி உணவுகள்- தஞ்சையைக் கலக்கும் உணவகம்

Thanjavur | மரச் செக்கு எண்ணெய், இயற்கை தானியங்கள் மட்டுமே பயன்படுத்தி உணவுகள்- தஞ்சையைக் கலக்கும் உணவகம்

தஞ்சாவூர் உணவகம்

தஞ்சாவூர் உணவகம்

Thanjavur | தஞ்சாவூரில் இயற்கை உணவுகளால் மக்களைக் கவர்ந்துவருகிறது இயற்கைத் தலைவன் உணவகம்.

தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகே உள்ள இயற்கையின் தலைவன் உணவகத்தில் முற்றிலும் மரச்செக்கு எண்ணை மற்றும் தானிய வகைகளை பயண்படுத்தி எண்ணற்ற வகையான உணவுகளை தயாரித்து மக்களுக்கு ‌ஆரோக்கியமான உணவுகளை‌ இயற்கையின் தலைவன் உணவகம் வழங்கிவருகிறது.

இயற்கையின் தலைவன் உருவான விதம்:

இந்த உணகத்தின் நிறுவனர்‌ மோகன் பல தொழில் செய்து வந்தும், குலத்தொழிலான ‌மரச்செக்கு எண்ணைகளை தயாரித்து விற்பனை செய்து வந்த நிலையில் அதன் மூலம்‌‌ மக்களிடையே நல்ல வரவேற்பும் ஆதரவும் ஏற்பட்டு வந்ததையடுத்து‌, அதிக முறை பயன்படுத்தும் எண்ணெய் மற்றும் ரசாயன கலவைகள் கலந்த உணவு முறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தால், முழுவதும் இயற்கையான முறையில் இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்.

தஞ்சாவூர் உணவகம்


பல இடங்களில் கிடைக்க கூடிய இனிப்பு மற்றும் கார வகைகளில் சர்க்கரை, டால்டா, ரவா, சோடா உப்பு, மறுசுழற்சி செய்யப்பட்ட எண்ணெய், கலர் பவுடர், அஜினமோட்டோ Sns இது போன்ற கலவைகள் கலக்கப்படுகிறது. இது மனித உடலுக்கு கேடு விளைவிக்க கூடும் என்பதால், இந்த வகையான கலவைகளை பயன்படுத்தாமல் முற்றிலும் இயற்கையான முறையில் நாட்டு சக்கரை, மரச்செக்கிள் ஆட்டப்பட்ட கடலெண்ணெயால் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்து வருகிறார்.

தஞ்சாவூர் உணவகம்


மேலும் மக்கள் பரோட்டாவை தான் அதிக அளவில் சாப்பிடுகிறார்கள். ஏனெனில் அது விலை குறைவாக இருப்பதாகவும் இரண்டு மூன்று பரோட்டா சாப்பிட்டாலே பசி ஏற்படாதவாறு இருப்பதால் வேலை செய்யும் பல தொழிலாளிகள் அதிக அளவில் உண்ணும் ஓர் உணவாக இருக்கிறது. அது உடலுக்கு மிகவும் கேடு ஏற்படுத்தக் கூடிய ஒரு உணவாகும்.

தஞ்சாவூர் உணவகம்


எனவே உணவே மருந்து என்ற கூற்றின் அடிப்படையில், இந்த ஒரு உணவு முறையை மாற்றுவதற்கான 3 ஆண்டு பெரு முயற்சியால் முழுவதுமாக‌ மரச்செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெயுடன்(கடலெண்ணை, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்) கலந்த தானிய முறைகளை கொண்டு பல வகையான உணவுகளை அவரது உணவகத்தில் தயாரித்து மக்களுக்கு ஒரு சேவையாக செய்வது வருகிறார்.

தானிய வகையான உணவுகளை போதுமான அளவு சாப்பிட்டாலே அதிக அளவில் அதில் சத்தானது கிடைத்து விடுகிறது. எனவே அனைத்து தரப்பு மக்களும் சாப்பிடக்கூடிய வகையில் இந்த வகையான உணவுகளை தயாரித்து ஏற்றுகொள்ள கூடிய விலையை நிர்ணயித்து தற்போது இந்த உணவகத்தை சிறப்பான முறையில் நடத்தி வருகிறார்.

உணவகத்தின்‌ சிறப்புகள்:

14 வகையான தானிய தோசைகளும், 6 வகையான தானிய இட்லிகளும் 15-க்கும் மேற்பட்ட சட்னி வகைகளும் மற்றும் இந்த உணவின் பயன்கள் வாடிக்கையாளர் அமர்ந்து சாப்பிடும் இடத்துக்கு அருகிலேயே வைக்கப்பட்டுள்ளது.

12 வகையான மதிய உணவுகளும் மற்றும் வாரத்தில் ஏழு நாளில் தினமும் ஒவ்வொரு வகையான தினை பொங்கலும், மற்றும் தினமும் ஒவ்வொரு வகையான உணவுகளும் கொடுக்கப்பட்டு அந்த உணவின் தகவலும் வாடிக்கையாளர் முன்பே வைக்கப்பட்டுள்ளது.

மாலை நேரங்களில் கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை பயன்படுத்தப்பட்ட 14க்கும் மேற்பட்ட தானிய பலகாரங்கள் மட்டுமின்றி பல வகையான தேநீரும் கொடுக்கப்படுகிறது. மேலும் 50க்கும் மேற்பட்ட தினை, தானிய வகையான இனிப்பு வகைகளும் கார வகைகளும் பல வகையான தினை பாணங்களும் கொடுக்கப்படுகிறது.

மேலும் இந்த உணவகத்தில், வாடிக்கையாளர்களுக்கு முன்பே மரச்செக்கு எண்ணெகளை தயாரித்து அந்த எண்ணெய்களை மட்டுமே பயன்படுத்த கூடியது குறிப்பிடத்தக்கதாகும்.

அனைவரும் விரும்பும் உணவகம்:

தஞ்சையில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களும் இந்த உணவகத்திற்கு வந்து சாப்பிட்டுவிட்டு மன மகிழ்ச்சியோடும் நிம்மதியோடும் செல்கின்றனர். பல நோய்கள் வந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் பல்வேறு இடங்களில் சுத்தமற்ற வகைகளில் அதிக முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்களும் பல வகையான செயற்கை ரசாயன கலவைகளால் உணவுகள் செய்யப்பட்டு வருகிறது. வேறு வழியின்றி நாம் அதை தொடர்ந்து உண்டு வருகிறோம். இருந்தும்" உணவே மருந்து" என்ற கூற்றின் அடிப்படையில்‌ இயற்கை தலைவன் போன்ற உணவகங்கள் இயங்கி வருவதால் அவற்றுக்கு மக்கள் பெருமளவில் ஆதரவு வேண்டும். நாம், நம் சந்ததிகள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று எண்ணினால் தற்போது நடைமுறையில் இருக்கும்‌ உணவு முறையை மாற்றுவதை தவிர வேறு வழி இல்லை‌. அதனாலேயே இந்த இயற்கை உணவகத்தை விரும்பி வந்து உண்கிறோம் என்று உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர் பலர் கூறுகிறார்கள்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் இந்த இயற்கையின் தலைவன் உணவகத்தை நிறுவுவதே இவர்களின் முக்கியமான நோக்கமாக இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி