Home /News /thanjavur /

சாப்பாட்டுக்கு வழி இல்லை.. மேயரை முற்றுகையிட்ட நரிக்குறவ பெண்கள்

சாப்பாட்டுக்கு வழி இல்லை.. மேயரை முற்றுகையிட்ட நரிக்குறவ பெண்கள்

 மேயர் சண்.ராமநாதன்

மேயர் சண்.ராமநாதன்

Thanjavur | சாப்பாட்டுக்கு வழி இல்லை வேலை கொடுங்கள் என மேயரை முற்றுகையிட்ட நரிகுறவ பெண்களுக்கு, உடனடியாக வேலை வழங்கிய மேயர்.

தஞ்சாவூர்  மாநகராட்சியில் ஒப்பந்தம் அடிப்படையில் துப்புரவு தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்த 8 நரிக்குறவ பெண்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். போதிய வருவாய் இல்லாத காரணத்தால் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் போட முடியாத காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த இரண்டு மாதங்களாக வருமானம் இல்லாமல் தவித்து வந்துள்ளனர்.இந்த நிலையில் தஞ்சை மானம்பு சாவடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரம் நடும் விழாவில் கலந்து கொள்ள வந்த தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனை சூழ்ந்து கொண்ட நரிக்குறவ பெண்கள் 8 பேர் இரண்டு மாதங்களாக வேலை இல்லாமல் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுகிறோம். வேலை கொடுங்கள் என கேட்டனர்.



Also see... விளையாட்டு வீரர்களுக்கு என தனி காப்பீடு திட்டம் - அமைச்சர் மெய்யநாதன்

உடனடியாக தன்னுடன் வந்த அதிகாரிகளை அழைத்த மேயர் நாளையில் இருந்து இவர்கள் வேலைக்கு வருவார்கள் பணி வழங்குங்கள் என உத்தரவிட்டார். தங்களுக்கு  வேலை வழங்கியதால் கையெடுத்து கும்பிட்டு நரிக்குறவ பெண்கள் மேயருக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.

(செய்தியாளர் ; எஸ்.குருநாதன், தஞ்சாவூர்)
Published by:Vaijayanthi S
First published:

Tags: Job, Mayor, Thanjavur

அடுத்த செய்தி