Home /News /thanjavur /

Thanjavur | வெண்டைக்காய் சாகுபடியில் லாபம் ஈட்டும் விவசாயி- நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்

Thanjavur | வெண்டைக்காய் சாகுபடியில் லாபம் ஈட்டும் விவசாயி- நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்

வெண்டைக்காய் சாகுபடி

வெண்டைக்காய் சாகுபடி

Thanjavur | தஞ்சாவூரைச் சேர்ந்த விவசாயி வெண்டைக்காய் சாகுபடியை சிறப்பாக செய்துவருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கருப்பட்டிபட்டி பொட்டலாம் தெரு எனும் கிராமத்தில் வளவப்பன் என்ற விவசாயி வெண்டைக்காய் சாகுபடியில் தற்போது நல்ல லாபத்தை பெற்று வருகிறார். இது குறித்து விவசாய வளவப்பனுடன் இந்த சாகுபடி குறித்து விசாரித்த போது, வெண்டைக்காய் சாகுபடி குறித்து பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

மேலும், வெண்டைக்காய் சாகுபடி பற்றியும் வெண்டைக்காய் சாகுபடி செய்வதற்கான சரியான வழிமுறை பற்றியும் முழு தகவல்களையும் இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

வெண்டைக்காய் சாகுபடி:

வெண்டைக்காய் சாகுபடியைப் பொருத்தவரையில் வருடம் முழுவதும் எந்த மாதத்திலும் பயிரிடலாம். வெண்டைக்காய் சாகுபடியில் தண்ணீர் அளவுடன் இருக்க வேண்டும். தண்ணீர் அதிக அளவில் விளை நிலத்தில் இருந்தால், சாகுபடியானது பெரிய அளவில் மகசூல் கிடைக்காது. மேலும் மற்ற காய்கறி சாகுபடிகளில் வெண்டைக்காய் சாகுபடியே அதிக அளவில் லாபத்தை ஈட்டி தரக்கூடிய ஒரு சாகுபடியாகும்.


வெண்டைக்காய் விதையை விதைவிக்கும் முறை:

பெரும்பாலும் மேடான பகுதிகளிலே இந்த வகையான சாகுபடிகளை செய்ய முடியும். உதாரணத்திற்கு ஒரு ஏக்கர் நிலத்தில் வெண்டைக்காய் பயிரிட வேண்டும் என்றால் முதலில் விளைநிலங்களை தயார் படுத்துவதற்காக ஏறு ஒட்டி விட்டு பின்பு, புற்கள் அதிக அளவில் இருந்தால் அதனை எடுத்துவிட்டு இயற்கை உரமோ அல்லது செயற்கை உரமோ தெளித்த பின்னர் அந்த நிலம் முழுவதும் பட்டம் இட வேண்டும்(வாய்க்கால் முறையில் பல வரிசைகளில் கோடு கோடாக உருவாக்க வேண்டும்) இந்த வாய்க்காலை 1.5 அடிக்கு ஒரு வாய்க்காலாக முறைப்படுத்தப்பட்ட பின்னர் ஒரு ஏக்கர் நிலத்திற்கு 700 கிராம் வெண்டைக்காய் விதைகளை வாய்க்கால்களில் தேவையான அளவு மட்டுமே தண்ணீர் செலுத்திய பிறகு ஒரு வாய்க்கால் விட்டு ஒரு வாய்க்கால்களில் முழுவதுமாக விதைகளை செலுத்த வேண்டும்.

சாகுபடி செய்ய ஆகும் காலம்:

வெண்டைக்காயானது முதலில் பூ வந்து அதிலிருந்து தான் காய் வரும் நிலையில் இந்த வெண்டைக்காய் சாகுபடியானது சரியாக விதை செலுத்திய 30- 35 நாள்களில் வெண்டைக்காய்களை ஒடித்து எடுக்கலாம். மேலும் ஒரு முறை விதைக்கப்படும் இந்த வெண்டைக்காய் விதையின் வாழ்நாள் ஆனது மூன்றில் இருந்து நான்கு மாத காலம் ஆகும்.



இந்த நான்கு மாதங்களும் செடிகளில் வளரும் வெண்டைக்காய்களை முதல் 30-35 நாட்கள் பிறகு ஒடித்த பின்னர், சாகுபடியானது கடைசி மூன்று மாதங்களில் அதிக அளவில் இருக்கும். இந்த வெண்டைக்காய்களை ஒருநாள் விட்டு ஒரு நாள் சாகுபடி செய்யலாம். ஒரு நாள் ஒடிக்கும் வெண்டைக்காய் மறு நாளே அந்த செடிகளில் வளர்ந்து விடும் எனவே அந்த வெண்டைக்காய் முத்திவிடுவகற்கு முன்னதாகவே, கண்காணித்து ஒடிக்க வேண்டும். மேலும் ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு முறை (முதல் 30 நாட்களில்) சாகுபடி செய்யப்படும் வெண்டைக்காய்களின் எடை அதிகபட்சம் 60 இலிருந்து 80 கிலோ இருக்கும். என விவசாயி கூறினார்.

லாபம் மற்றும் விற்கும் முறை:

உதாரணத்திற்கு ஒரு ஏக்கர் நிலத்தில் வெண்டைக்காய் சாகுபடி செய்யும் போது நான்கு மாதத்தில் 50 லிருந்து 70 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். விவசாயி வளவப்பனை பொறுத்தவரையில் இடைத்தரகர்கள் இல்லாமல் வெண்டைக்காய்களை மக்களிடம் நேரடியாக விற்பதால் முழுமையான லாபம் பெறுகிறார்.

சிரமங்கள் மற்றும் பாதிப்புகள்:

இந்த வெண்டைக்காய் சாகுபடியை பொறுத்தவரையில் செடிகளில் பூச்சிகள் மற்றும் சில தொற்று கிருமிகள் தாக்கக்கூடிய அபாயம் உள்ளது. அதில் முக்கியமாக இந்தச் செடிகளில் உள்ள இலையை திருப்பிப் பார்த்தால் மஞ்சள் நிறத்தில் வளைந்து காணப்படுவது போல் இருந்தால் பச்சை கொசு, மஞ்சள் கொசு இந்த இரண்டு வகையான பூச்சிகளும் அந்த பாதிக்கப்பட்ட ஒரு செடியில் இருந்து அந்த ஒரு கிருமியை தன்னுள் ஏற்று மற்ற செடிகளில் பரப்பி விடும். இதனால் மொத்த வெண்டைக்காய் செடியும் பாதிக்கப்படும். எனவே காய்கள் வளராமல் பெரிய அளவில் நஷ்டத்தை கொடுக்கும். இந்த ஒரு பாதிப்பை தடுப்பதற்காக முன்கூட்டியே செயற்கை உரங்களான (யூரியா, காம்ப்ளக்ஸ்) மற்றும் இயற்கை உரங்கள்( ஆட்டுபுளுக்கை, மாட்டுச்சாணம், கோமியம், சர்க்கரை, விளைநிலத்தின் மண் ஆகியவை கலந்த கலவை) பயன்படுத்தினால் இந்த தொற்றுக்கிருமி தாக்கத்திலிருந்து செடிகளை பாதுகாக்கலாம். இதிலும் செயற்கை உரங்களை காட்டிலும் இயற்கை உரங்களே அதிக அளவில் பாதுகாப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

புதிதாக இந்த வகையான சாகுபடி செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமானவை:

மற்ற காய்களை விட வெண்டைக்காய் சாகுபடியில் அதிக அளவில் லாபம் ஈட்ட முடியும் என்பது ஒரு நிதர்சனமான உண்மை ஆகும். ஆனால் அதே அளவில் இந்த வெண்டைக்காய் சாகுபடியும் அதிக அளவு கண்காணிப்பும் கவனமும் அதிக அளவில் இருக்க வேண்டும்.

ஏனென்றால் அதிக அளவில் தண்ணீர் சேர்ந்தாலோ அல்லது தொற்று கிருமிகள் வந்தாலோ பூச்சிகள் சேதப்படுத்தினாலோ உரங்களை மாற்றி தெளித்தாலோ உதாரணத்திற்கு (பொட்டாசியம் உரம் இந்த வகையான சாகுபடிக்கு ஆகாது) இந்த சாகுபடியை முற்றிலும் வளர விடாமல் அழித்துவிடும்.

அதிக முறை செடிகளை வந்து கண்காணிப்பதோடு முடிந்த அளவு இயற்கை உரங்களை பயன்படுத்துவது சிறப்பான ஒன்றாகும்.( செயற்கை உரங்களும் பயன்படுத்தலாம்) மேலும் மழைக்காலங்களில் கவனமாக இருந்து தண்ணீரை வாய்க்கால் மூலம் வெளியேற்றும் படி செய்வது முக்கியமான ஒரு வேலையாகும். இந்த அனைத்து வேலைகளையும் சரியாக செய்தால் வெண்டைக்காய் சாகுபடியில் அதிக அளவில் லாபம் பார்க்கலாம் என விவசாயி வளவப்பன் கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி