முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நூதன போராட்டம்: நாதஸ்வரமேள தாளமுடன் சுற்றியதால் பரபரப்பு

காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நூதன போராட்டம்: நாதஸ்வரமேள தாளமுடன் சுற்றியதால் பரபரப்பு

காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க ஊர்வலமாக சென்ற அனுமன் சேன அமைப்பினர்

காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க ஊர்வலமாக சென்ற அனுமன் சேன அமைப்பினர்

Thanjavur Valentine's Day Protest | காதலர் தினம் என்பது மேற்கத்திய கலாச்சாரம் என்றும் காதலர் தினம் என்ற பெயரில் ஆபாச காதலை எதிர்ப்பதாக அனுமன் சேன அமைப்பினர் கோஷம் எழுப்பினர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூரில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நூதன போராட்டத்தில் அனுமன் சேனா அமைப்பினர் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் மற்றும் பூங்காவில் கூடும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நூதன போராட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் அனுமன் சேனா அமைப்பினர் ஈடுபட்டனர். நாதஸ்வர மேள தாளமுடன், தேங்காய், பூ, பழங்கள், திருமாங்கல்யம் உள்ளிட்ட பொருட்களுடன்  வரிசை தட்டுடன் ஊர்வலமாக வந்து அனுமன் சேனா அமைப்பினரை காவல்துறையினர் கோயில் வாசலில் தடுத்து நிறுத்தினர்.

இந்து கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் எதிரான காதலர் தினத்தை தடை செய்ய வேண்டும் என்றும் காதலர் தினம் என்பது மேற்கத்திய கலாச்சாரம், உண்மை காதலை போற்றுகிறோம் ஆதரிக்கிறோம் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

காதலர் தினம் என்ற பெயரிலான ஆபாச காதலை எதிர்ப்பதாகவும் காதலர் தினம் என்பதால், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் பூங்காவிற்கு வருகை தரும் காதல் ஜோடிகளுக்கு, அவர்களது காதலை அங்கீகரிக்கும் வகையில் திருமாங்கல்யம் அளித்து, திருமணம் செய்து வைப்போம்  என கோஷங்கள் எழுப்பினர்.

இதில் அனுமன் சேனா மாநில செயலாளர் கா.பாலா தலைமையில் 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் குடும்ப சகிதம வருபவர்களை மட்டும் பூங்கா பகுதியில் அனுமதித்தும், பிறரை அங்கிருந்து காவல்துறையினர் அப்புறப்படுத்தி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

செய்தியாளர் : எஸ்.குருநாதன்

First published:

Tags: Kumbakonam, Local News, Thanjavur, Valentine's day