Home /News /thanjavur /

தகுதித்தேர்வில் தோல்வி.. திருமணத்தில் சிக்கல் - விரக்தியில் பட்டதாரி இளைஞர் தற்கொலை

தகுதித்தேர்வில் தோல்வி.. திருமணத்தில் சிக்கல் - விரக்தியில் பட்டதாரி இளைஞர் தற்கொலை

தஞ்சை இளைஞர் தற்கொலை

தஞ்சை இளைஞர் தற்கொலை

Thanjavur | பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்வில் தோல்வியுற்றதால், வாலிபர் மணிகண்டன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் முதலியார் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பாலு. இவரது மகன் மணிகண்டன் ( வயது 33). எம்.எஸ்ஸி , எம்.பில் முதுநிலை பட்டதாரியான மணிகண்டன் கல்லூரி பேராசிரியர் பணிக்காக முயற்சி செய்து வந்துள்ளார். இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாநில அரசின் தகுதி தேர்வில் கலந்துக் கொண்டுள்ளார். தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது.

இதில் சுமார் 5 மதிப்பெண்கள் குறைவாக எடுத்து தோல்வி அடைந்துள்ளார். இதன்காரணமாக விரக்தியில் இருந்துள்ளார். நிரந்தரமான பணி இல்லாததால் திருமணம் கைகூடுவதில் சிக்கல் நீடித்து வந்துள்ளது. பெரும் மனஅழுத்தம் மற்றும் கடும் மன உளைச்சலிலும் கடந்த சில வாரமாக மணிகண்டன் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு அவரது குடும்பத்தினர் வீட்டின் கீழ்தளத்தில் இருக்க மாடியில் உள்ள அறைக்கு சென்ற மணிகண்டன் கதவை உட்புறமாக  தாழிட்டுக் கொண்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார்.  மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் மாடிக்கு சென்று பார்த்துள்ளனர்.  மணிகண்டன், உட்புறமாக தாழிடப்பட்ட அறைக்குள், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக இதுகுறித்து திருவிடைமருதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தந்தனர். இதன்பேரில், திருவிடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சாதிக், காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Also see... பில்கிஸ் பானோ வழக்கில் 11குற்றவாளிகள் விடுவிப்பு - வலுக்கும் எதிர்ப்பு

பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்வில் தோல்வியுற்றதால், வாலிபர் மணிகண்டன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேப்பெருமாநல்லூர் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியினையும் சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. பலியான மணிகண்டன் இதற்கு முன்பு கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஓராண்டு காலம் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.




மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime News, Thanjavur

அடுத்த செய்தி