ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

மழை பெய்யுதே.. ரெயின் கோட் போட்டு மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள்... தஞ்சாவூரில் சுவாரஸ்ய சம்பவம்!

மழை பெய்யுதே.. ரெயின் கோட் போட்டு மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள்... தஞ்சாவூரில் சுவாரஸ்ய சம்பவம்!

ரெயின் கோட் அணிந்து செல்லும் ஆடுகள்

ரெயின் கோட் அணிந்து செல்லும் ஆடுகள்

தனது ஆடுகள் மழையில் நனைந்து விட கூடாது என அதன் உரிமையாளர் கோணி பையினால் ஆன ரெயின் கோட்டை தயாரித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thanjavur | Thanjavur

  தஞ்சாவூரில் பெய்து வரும் தொடர் மழையால் ரெயின் கோட் அணிந்து மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு  அருகே  உள்ள குலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (70).

  விவசாயியான இவர் ஆடு, மாடு, கோழி என கால்நடைகள் வளர்ப்பில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழை பொழிந்து வருவதால் மேய்சலுக்கு சென்ற அவரது  ஆடுகள் மழையில்  நனைந்து சிரமத்துக்குள்ளானது.

  தன்னுடைய பிள்ளைகளாக கருதி ஆடு வளர்ப்பில் ஈடுப்பட்டு வரும் கணேசனுக்கு ஆடு மழையில் நனைந்து ஈரத்தில்  நடுங்குவதை பார்க்க மனமில்லை. மேய்ச்சலுக்கு போகும் ஆடு மழையில்  நனையாமல் இருக்க  என்ன செய்யலாம் என யோசித்தவருக்கு ஆடுக்கு ”ரெயின் கோட்”  போட்டால் என்னவென்று தோன்றியிருக்கிறது.

  சட்டனெ அதை பிடித்து கொண்டவர் அரிசி சாக்கினை ரெயின் கோட்டாக்கி ஆடுகளுக்கு அணிந்து விட்ட பிறகு தினமும் மேய்ச்சலுக்கு அனுப்பி வருகிறார்.  இதனால் ஆடுகள் மழையில் நனையாமல் செல்கின்றன.

  இந்த செயலை பார்த்த பலரும் விவசாயி கணேசனை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

   செய்தியாளர்: எஸ்.குருநாதன்,தஞ்சாவூர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Tanjore, Thanjavur, Viral Video