தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பூவத்தூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார 11 கிராமங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையிலும், தனியார் பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் செல்வதை பார்த்து ஏங்கும் ஏழை எளிய மாணவர்களின் ஏக்கத்தை போக்கும் வகையில் முன்னாள் மாணவர்கள், ஊர் மக்கள் மற்றும் பூவத்தூர் கல்வி வளர்ச்சி குழுமம் இணைந்து பள்ளிக்கு சுமார் 13 லட்சம் மதிப்பிலான பேருந்தை வாங்கி கொடுத்துள்ளனர்.
இதன் மூலம் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் பேருந்தில் செல்வதை பார்க்கும் அரசு பள்ளி மாணவர்களின் ஏக்கத்தை போக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
மேலும் இப்பகுதியில் உரிய பேருந்து வசதிகள் இல்லாததால், மாணவர்கள் பல கிலோமீட்டர் நடந்து பள்ளிக்கு செல்லக்கூடிய நிலை உள்ளது. இதனால் பெற்றோர்கள் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவதற்கு பயப்படக்கூடிய சூழல் உள்ளது. இதனை போக்குவதற்காகவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் முதல்முறையாக அரசு பள்ளிக்கு என்று, பள்ளி வாகனம் வாங்கி, பள்ளியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த பேருந்து வசதி மூலம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கூடும். மேலும் மாணவர்கள் பல கிலோமீட்டர் நடந்து செல்லக்கூடிய அவல நிலை இல்லாத ஒரு நிலை ஏற்படும் என இப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
Also see... மீண்டும் கொரோனா: மத்திய அரசு இன்று ஆலோசனை
இதுகுறித்து பள்ளி மாணவிகள் கூறுகையில், இப்பகுதியில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் பயந்து வந்தனர். இதனால் தங்களின் கல்வி பாதித்தது. தற்போது இந்த பள்ளி வாகன மூலம் நாங்கள் பாதுகாப்பாக பள்ளிக்கு வந்து செல்கிறோம். மேலும் உரிய நேரத்தில் பள்ளிக்கு வருவதால் எங்களுக்கு பாடம் படிக்க எளிதாக உள்ளதாகவும் அவர்கள் மகிழ்ச்சி தெரிகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Government school, Local News, School Bus, Thanjavur