ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

இரட்டை குவளை முறை.. தஞ்சை கிளாமங்கலம் கிராமத்தில் தீண்டாமைக் கொடுமை நிலவுவதாக புகார்.. சர்ச்சை வீடியோ

இரட்டை குவளை முறை.. தஞ்சை கிளாமங்கலம் கிராமத்தில் தீண்டாமைக் கொடுமை நிலவுவதாக புகார்.. சர்ச்சை வீடியோ

பாப்பாநாடு காவல்நிலையம்

பாப்பாநாடு காவல்நிலையம்

கிளாமங்கலம் பகுதியில் இரட்டை குவளை முறை பின்பற்றப்படுவதாகவும், பொருட்கள் வாங்க போனால் இல்லை என கடைக்காரர்கள் கூறுவதாகவும் பட்டியல் இன மக்கள் புகார்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிளாமங்கலம் பகுதியில் இரட்டை குவளை முறை பின்பற்றப்படுவதாகவும், பொருட்கள் வாங்க போனால் இல்லை என கடைக்காரர்கள் கூறுவதாகவும் பட்டியல் இன மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கிளாமங்கலம் கிராமத்தில், டீ கடைகளில் இரட்டை குவளை முறையும், முடித்திருத்தும் கடையில் ஆதி திராவிடர் சமூக மக்களுக்கு முடி திருத்தம் செய்யாமலும் பல ஆண்டுகளாக தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த அக்.2ம் தேதி ஒரத்தநாடு தாசில்தாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து கிராம அலுவலர் ஆய்வு செய்து தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்து அறிக்கை அளித்துள்ளார்.  அதன் பிறகு இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த மாற்று சமூகத்தினர், பட்டியல் இன மக்கள் யாருக்கும் மளிகைக் கடைகளில் பொருள் வழங்கக் கூடாது, முடிதிருத்தம் செய்யக்கூடாது என கிராம கட்டுப்பாடு விதித்துள்ளதாக கூறினர். மேலும், ஆதிதிராவிடர் தெருவுக்கு குடிநீர் வராமல் தடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டம்.. பயனாளிகளுக்கு நிலம் ஒதுக்காத தமிழக அரசு..? எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மளிகை கடையில், ஆதி திராவிடர் சமுகத்தை சேர்ந்த ஒருவர் பெட்ரோல் கேட்கும் போது உங்களுக்கு தரக் கூடாது என கிராமத்தில் தடை விதித்து இருப்பதாக மளிகை கடைக்கார் கூறும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகியது.

இது தொடர்பாக ஒரத்தநாடு தாசில்தார் சுரேஷ் கிளாமங்கலம் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இது குறித்து  அப்பகுதி மக்கள் கூறுகையில், அனைவரும் அண்ணன் தம்பி போல் பழகி வருவதாகவும், இதுவரை நாங்கள் அவர்களை தாக்கியதும் இல்லை, அவர்கள் எங்களை தாக்கியதும் இல்லை, ஆனால் ஊர் முழுவதும் காவல்துறையினர் ஏன் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் தெரியவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் வெளியில் இருந்து கொண்டு  ஊரில் உள்ள இளைஞர்களை தூண்டி விடுவதாகவும் குற்றம் சாட்டும் பொதுமக்கள் கடைகளில் பெட்ரோல் விற்கக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளதால் அவர் பெட்ரோல் இல்லை என்று கூறியதாகவும், தங்கள் ஊரில் தீண்டாமை என்பது இல்லை என அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பாப்பாநாடு காவல்துறையினர் கிளாமங்கலம் பகுதியை சேர்ந்த ஆறு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Local News, Tamil News, Thanjavur