ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

கடனில்லா தஞ்சாவூர் மாநகராட்சி! - மேயர் பெருமிதம்

கடனில்லா தஞ்சாவூர் மாநகராட்சி! - மேயர் பெருமிதம்

தஞ்சை மாநகராட்சி

தஞ்சை மாநகராட்சி

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில், நிர்வாகத் திறமையின்மையால் தஞ்சாவூர் மாநகராட்சி கடனில் சிக்கித் தவித்ததாக கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாநகராட்சி கடன் இல்லாத மாநகராட்சியாக உருவெடுத்துள்ளது என அதன் மேயர் சண். ராமநாதன் மாமன்ற கூட்டத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம், மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மேயர் சண்.ராமநாதன், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில், நிர்வாகத் திறமையின்மையால் தஞ்சாவூர் மாநகராட்சி கடனில் சிக்கித் தவித்ததாக கூறினார்.

இதையும் வாசிக்க: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்குகிறது... 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

இதனால், பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் இருந்ததாகவும் தெரிவித்தார். ஆனால், கடந்த 6 மாதங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள், கட்டடங்களை முறையாக ஏலம் விட்டு வருவாயைப் பெருக்கியதாக குறிப்பிட்டார். அத்துடன், திமுக ஆட்சியில் திட்டமிட்ட வளர்ச்சிப் பணிகளால் தற்போது, தஞ்சாவூர் மாநகராட்சி கடன் இல்லாத மாநகராட்சியாக உருவெடுத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Mayor, Tanjore