முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / தஞ்சாவூரில் ஒட்டகத்தை வைத்து யாசகம் பெற்ற நபர்.. பறிமுதல் செய்து நடவடிக்கை..!

தஞ்சாவூரில் ஒட்டகத்தை வைத்து யாசகம் பெற்ற நபர்.. பறிமுதல் செய்து நடவடிக்கை..!

தஞ்சாவூரில் பறிமுதல் செய்த ஒட்டகம்

தஞ்சாவூரில் பறிமுதல் செய்த ஒட்டகம்

Thanjavur Camel | ஒட்டகத்தை வைத்து துன்புறுத்தி பிச்சை எடுப்பதாக வந்த புகாரின் அடிப்படையிலேயே ஒட்டகம் பறிமுதல்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஒட்டகத்தை ஓட்டி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஒட்டகத்தை துன்புறுத்தி கடைகள் மற்றும் சாலையில் செல்பவரிடம் பிச்சை எடுப்பதாக மிருகவதை தடுப்பு சங்கத்தினருக்கு தொலைபேசி மூலம் புகார் வந்தது. இதனையடுத்து புதிய பேருந்து நிலையம் சென்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஒட்டகத்தை அவரிடம் இருந்து மீட்டு மிருகவதை தடுப்பு சங்க அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் ஒட்டகம் துன்புறுத்தப்பட்டு பிச்சை எடுக்க பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்து பாதுகாப்பு மையத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் ஒட்டகம், யானை, குதிரை உள்ளிட்டவைகளை வணிக நோகத்திற்காக பயன்படுத்தி பொருள் ஈட்டி வரும் நிலையில் ஒட்டகத்தை வைத்து ஒருவர் துன்புறுத்தி பிச்சை எடுப்பதாக வந்த புகாரின் அடிப்படையிலேயே இந்த ஒட்டகம் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் ஒட்டகத்திற்கான உரிய ஆவணத்தை காண்பித்து அவருடைய ஒட்டகம் தான் என உறுதியான பிறகு அதனை அவரிடம் வழங்கப்படும் அல்லது மிருகங்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

செய்தியாளர்: எஸ்.குருநாதன்

First published:

Tags: Local News, Thanjavur