தஞ்சாவூரில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், வளைவில் திரும்பும் போது சாலையோரம் இருந்த தேக்கு மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள புளியம்பட்டை பகுதியைச் சேர்ந்த அவினாஷ் (26), செட்டிமண்டபம் வடக்கு தெருவை சேர்ந்த கணேஷ் (23) ஆகிய இருவரும் இன்று நடைபெற உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்காக நேற்று இரவு கொத்து கோவில் திருமண மண்டபத்திற்கு சென்று விட்டு அதிகாலை இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
அப்போது அனந்தமங்கலம் பகுதியில் அதிவேகமாக வந்து வளைவில் திரும்பும்போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த தேக்கு மரத்தில் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். காலை அந்த பகுதி வழியாக சென்றவர்கள் மோட்டார் சைக்கிளுடன் இருவர் இறந்து கிடப்பதை கண்டு திருநீலக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: எஸ்.குருநாதன், தஞ்சாவூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Accident, Local News, Thanjavur