தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையில் ஸ்ரீ நரசிம்ம பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த ஆலயத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். இன்று சனிக்கிழமை என்பதால் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அதிக அளவில் கோயிலுக்கு வந்துள்ளனர்.
அப்போது தஞ்சை வண்டிக்கார தெருவை சேர்ந்த உமா என்பவர் தனது உறவினர்களுடன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு காரில் ஏறும்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மநபர் 7 பவுன் தங்கச் செயினை அறுத்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உமா திருடன் திருடன் எனக் கத்துவதை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.
இதனையடுத்து பிடிபட்ட நபரின் சட்டை வேட்டி ஆகியவற்றை கழட்டி கோவில் வளாகத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர். பிறகு மேற்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து காவல்துறையினம் அந்த நபரை ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் :எஸ்.குருநாதன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Thanjavur