ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

1000 கிலோ அன்னம்.. 700 கிலோ காய்கறி,பழங்கள்.. தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் அன்னாபிஷேகம்!

1000 கிலோ அன்னம்.. 700 கிலோ காய்கறி,பழங்கள்.. தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் அன்னாபிஷேகம்!

பெருவுடையாருக்கு 1000கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம்

பெருவுடையாருக்கு 1000கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம்

Thanjavur big temple | பெரியகோவிலில் பெருவுடையாருக்கு 1000கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம், 700 கிலோ காய்கறிகளாலும் சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனையும் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஸ்ரீபெருவுடையார் ஆலயம் உலகப்புகழ் பெற்றது. பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும், கட்டிட கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி வருகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம், அதைப்போல் இந்தாண்டும் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றத.

இதில் சுமார் 1000 கிலோ அன்னம் மற்றும் கேரட், கத்திரிக்காய், வாழைப்பூ, பூசணி, முள்ளங்கி, பீட்ருட், வெண்டைக்காய், புடலங்காய் மற்றும் மாதுளை, வாழைப்பழம் உள்ளிட்ட காய்கறிகள் என 700 கிலோ கொண்டு பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது.

இந்த அன்னாபிஷேகம் மூலம் உலக மக்கள் நலன் பெறவேண்டியும், நீர்நிலைகள் நிரம்பவும், விவசாயம் செழிக்கவும் பூஜை செய்யப்பட்டது. அன்னாபிஷேகம் முடிந்ததும் அலங்காரம் கலைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்ப்பட்டது.

மேலும் படிக்க... ஐப்பசி பௌர்ணமியில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஏன்?

மேலும் நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகள் உணவருந்தும் வகையில் அன்னம் ஆற்றில் கரைக்கப்பட்டது.  இந்த அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Hindu Temple, Thanjavur