Home /News /thanjavur /

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி தஞ்சையில் வணிகர்கள் கடை அடைப்பு..

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி தஞ்சையில் வணிகர்கள் கடை அடைப்பு..

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு.. தஞ்சையில் வணிகர்கள் கடையடைப்பு..

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு.. தஞ்சையில் வணிகர்கள் கடையடைப்பு..

TASMAC : தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மாட்டுமேஸ்திரி சந்து அமைந்துள்ளது. இங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
தஞ்சாவூரில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி  வணிகர்கள் 100க்கும் மேற்பட்டோர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மாட்டுமேஸ்திரி சந்து அமைந்துள்ளது. இது சந்து தெற்கு வீதியும் - பழைய பேருந்து நிலையத்தையும் இணைக்கும் முக்கிய வழியாக உள்ளது.  இந்த வழியை கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

இந்த மதுபான கடையில் குடிமகன்கள், மது குடித்துவிட்டு அப்பகுதியில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்களையும், அப்பகுதியில் கடை வைத்திருக்கும் வணிகர்களிடம் தகராறில் ஈடுபடுவதால் இந்த கடையை அகற்றுமாறு அப்பகுதி வணிகர்கள்  மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  மனு அளித்தும் இதுவரை கடையை அகற்றவில்லை.

டாஸ்மாக் வேண்டாமென போராடும் வணிகர்கள்


இதனால் மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதியில் உள்ள  100க்கும் மேற்பட்ட வணிகர்கள் கடைகளை அடைத்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உடனடியாக கடையை அகற்றவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

வணிகர் பாபு


இது குறித்து வணிகர் பாபு என்பவர் கூறும்போது, சுதந்திரம் வாங்கி 75 வருடம் ஆகிறது. இந்த டாஸ்மாக்கால் பயமில்லாமல் என்னால் இந்த சந்தில் நுழைய முடியவில்லை. தினசரி யாராவது குடுத்துவிட்டு வந்து கடைக்கு வரும் வாடிக்கையாளரை தொந்தரவு செய்கின்றனர். ஒரு பெண்ணின் பர்ஸை பிடிங்கி கொண்டு ஓடிவிட்டனர். என்னால் புகார் அளிக்க கூட முடியவில்லை.கலெக்டர் , தாசில்தார் என பலரிடம் மனு அளித்தும் என்ன என்று கூட கேட்கவில்லை. 2 வருடமாக போராடுகிறேன் என தெரிவித்துள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Tasmac, Thanjavur

அடுத்த செய்தி