கும்பகோணம் அருகே இரயில்முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொள்ளும் வீடியோ சமூக வளைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள தாராசும் இரயில் நிலையத்தில்,திருச்சியில் இருந்து மயிலாடுத்துறை சென்ற இரயிலில் இளைஞர் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து அங்கு வந்த இரயில் இருப்பு காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் காவல்துறையின் முதற்கட்ட விசாரனையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர், அரித்துவாரமங்கலம் திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாஸ்கரன்-தேவி தம்பதியினர் மகன் முத்துகுமரன்(வயது24)என்பது தெரியவந்துள்ளது.இவர் கும்பகோணத்தில் உள்ளதனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் முத்துகுமரன் மனஅழுத்ததால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மனஅழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முத்துகுமரன் தற்கொலை செய்து கொள்ளும் வீடியோ சமூக வளைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவி மையம்: 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.