தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு அருகே நடவு நடும் பணிகள் மேற்கொண்ட விவசாயிகளிடம் நீர்ப்பாசனம் திறந்ததையும் நடவு முறைகளை பற்றியும் விசாரித்தபோது அவர்கள் கூறியவை, ‘பொதுவாக ஒரு வருடத்திற்கு மூன்று முறை நெல் சாகுபடியானது விளைவிக்கப்பட்டு அறுக்கப்படும். அதில் குறுவை, சம்பா, கோடை என மூன்று வகைகளாக நடவுகள் நடப்பட்டு சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த மாதம்(ஆனி) நடப்படும் நடவை குறுவை சாகுபடி எனவும், இந்த நடவானது , புரட்டாசி மாதம் அறுவடை செய்யப்பட்டு மீண்டும் கார்த்திகை மாதம் நடவு நடப்படும். மீண்டும் அதை தை மாதம் அறுவடைசெய்யப்படும். பிறகு மீண்டும் கோடை நடவாக மாசி மாதம் நடப்பட்டு வைகாசி மாதம் அறுவடை செய்யப்படும், இது அனைத்து இடங்களில் பயன்படுத்தப்படும் பொதுவான சாகுபடி முறையாகும். என கூறினார்கள் அப்பகுதியி விவசாயிகள்.
மேலும், இந்த மூன்று சாகுபடிகளில் குறுவை, சம்பா சாகுபடிகளுக்கு மட்டுமே ஆற்றிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். கோடை நடவுகளுக்கு கிணற்றுத் தண்ணீரையும் போர் தண்ணீரையும் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயம்
பொதுவாக அனைத்து வருடங்களிலும் ஜூன் மாதம் 11 தேதி-க்கு பிறகு ஆற்று நீர் பாசனமானது திறக்கப்பட்டு பின்னர் தை மாசம் ஆற்றுநீர் பாசனம் நிறுத்தப்படும். மேலும், இந்த நீர்கள் ஆற்றிலிருந்து காட்டாறுகளாகப் பிரிக்கப்பட்டு அதில் பல வாய்க்கால் அமைப்புகளை ஏற்படுத்தி நிலப்பரப்பிற்கு செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்க்கால் பிரிவு முறை அனைத்து இடங்களிலும் அந்த காலத்திலிருந்தே அமைக்கப்பட்ட ஒன்றாகும்.

ஆற்றுநீர் பாசனம்
கூலி விவசாயிகள் மகிழ்ச்சி !
இது குறித்து அங்கு கூலி வேலை விவசாயிகளிடம் பேசியபோது, ‘கடந்த இரண்டு மாதங்களாக விவசாய வேலை இல்லாமல் மிகவும் சிரமமாக இருந்ததாகவும் குறுவை சாகுபடி நடவு வந்ததிலிருந்து தினமும் வேலை கிடைப்பதாகவும், பணத்திற்கான தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய முடிந்துள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினர்.
மேலும், பொதுவாக ஒரு வருடத்தில் ஜூன் மாதம் முதல் தை மாதம் வரை அதிகளவில் விவசாய வேலைகள் கிடைப்பதாகவும் அடுத்த நான்கு மாதங்களுக்கு விவசாய வேலைகள் அதிக அளவில் கிடைக்காததால் வருடம் முழுவதும் அந்த நான்கு மாதங்களை கடப்பது மிகவும் சவாலான ஒன்றாகும் என அங்கு வேலை செய்யும் கூலி விவசாயிகள் கூறினார்கள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(Thanjavur)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.