Home /News /thanjavur /

62 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட தஞ்சை நடராஜர் சிலை நியூயார்க்கில் கண்டுபிடிப்பு!

62 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட தஞ்சை நடராஜர் சிலை நியூயார்க்கில் கண்டுபிடிப்பு!

தஞ்சை நடராஜர் சிலை

தஞ்சை நடராஜர் சிலை

பலகட்ட தேடலுக்குப் பிறகு நியூயார்க்கில் உள்ள ASIA SOCIETY MUSEUM-ல் உண்மையான சிலை இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
62 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட 1200 ஆண்டு கால பழமையான சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் திருவேதிக்குடி கண்டியூரில் அருள்மிகு வேதபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இது 2000 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் போன்ற மாமுனிகள் பாடியதால் பழங்காலத்திலிருந்தே இந்த கோவில் புகழ்பெற்று விளங்குகிறது.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவேதிக்குடி பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம்(60) என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுமார் 62 ஆண்டுகளுக்கு முன் இக்கோவிலிலிருந்து திருடப்பட்ட பலகோடி மதிப்புகொண்ட நடராஜர் சிலை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகாரில், தனது தந்தை சம்பந்தம் சேதுராயர் என்பவர் 35 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதாகவும் அவர் இறப்பதற்கு முன்பாக காணாமல் போன சிலையை கண்டுபிடிக்க கோரி நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் ஆனால் அப்புகாரின் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

எனவே தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டி புகார் அளிப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன் வெங்கடாச்சலம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தார்.
விசாரணையில் புகார் உண்மையானது என தெரியவந்தது. கோயிலில் தற்போது பக்தர்கள் வழிபட்டு வரும் நடராஜர் சிலை போலியானது எனவும், உணமையான தொன்மை வாய்ந்த நடராஜர் சிலை 62 ஆண்டுகளுக்கு மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது.

திருடப்பட்ட நடராஜர் சிலை


மேலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பாண்டிச்சேரியின் இந்தோ-பிரெஞ்சு நிறுவனத்திடம் இருந்து அசல் புகைப்படப் படங்களைக் கேட்டு பெற்று உலகமெங்கும் உள்ள அருங்காட்சியகங்கள், கலைப்பொருள் சேகரிப்பாளர்களின் சிற்றேடுகள் மற்றும் ஏல மையங்களின் வலைத்தளங்களில் உலகளாவிய தேடலைத் தொடங்கியது.

ALSO READ |  ஏடிஎம்மில் தினமும் லட்சத்தில் டெபாசிட்.. சுற்றி வளைத்த போலீசார்
 பலகட்ட தேடலுக்குப் பிறகு நியூயார்க்கில் உள்ள ASIA SOCIETY MUSEUM-ல் உண்மையான சிலை இருப்பதைக் கண்டுபிடித்தனர். நியூயார்க்கில் உள்ள ஆசியா சொசைட்டி அருங்காட்சியகத்தில் உள்ள நடராஜர் சிலை பாண்டிச்சேரி பிரெஞ்ச் நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட திரிவேதிகுடி நடராஜர் சிலையின் புகைப்படம் தான் என்பதை உறுதிபடுத்தியுள்ளனர்.



நடராஜர் சிலை



 மேலும், யுனெஸ்கோ ஒப்பந்தத்தின்படி நடராஜர் சிலையை மீட்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கோயிலில் இருந்து வேறு ஏதேனும் சிலைகள் திருடப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Tanjore, Tanjore temple

அடுத்த செய்தி