திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி
ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 26 தேதி இரவு கும்பகோணம் வந்தார். பிறகு கும்பகோணம் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கி அங்கு நடைபெற்ற அறிவாலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை முடித்து கொண்டு தஞ்சை வந்தார்.
தஞ்சையில் உள்ள அறிவாலயத்தில் அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் திருவுருப்படத்திற்கு மரியாதை செய்து விட்டு திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினர். பின்னர் தஞ்சாவூர் மாநகராட்சியில் நவீன தூய்மைப்படுத்தும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Also Read : தமிழகத்தில் ஒரே நாளில் 1,484 பேருக்கு கொரோனா
முன்னதாக மாநகராட்சி அலுவகம் வந்த அவருக்கு தாரை தப்பட்டத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது உதயநிதி ஸ்டாலின் காலில் மேயர் இராமநாதன், மேயருக்கான அங்கியுடன் காலில் விழுந்து வணங்கினார். இது அங்கு கூடியிருந்தவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மேயர் காலில் விழும் காட்சிகள் சமூக வளைதலங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.