ஹோம் /நியூஸ் /Thanjavur /

Thanjavur : தஞ்சையில் தொன்மையை சுமந்து நிற்கும் 600 ஆண்டு பழமையான நூலகம்

Thanjavur : தஞ்சையில் தொன்மையை சுமந்து நிற்கும் 600 ஆண்டு பழமையான நூலகம்

தஞ்சாவூர் நூலகம்

தஞ்சாவூர் நூலகம்

Thanjavur District : தஞ்சாவூரில் 600 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்மையான நூலகம் செயல்பட்டுவருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  600 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம் :

  சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட தஞ்சை சரஸ்வதி நூலகம், 600 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒன்றாகும். இந்த நூலகம் தஞ்சை அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது. இது உலகில் உள்ள தொன்மையான நூலகங்களில் ஒன்றாக சிறப்பாகக் கருதப்படுகின்றது. மேலும், இந்த நூலகம் பற்றி அந்த நூலகத்தில் வேலைப்பார்க்கும் சிலரிடம் விசாரித்த போது சில சுவாரஸ்யமான குறிப்புகள் கிடைத்துள்ளன.

  இந்த நூலகத்தின் தோற்றம்:

  இந்த சரஸ்வதி நூலகமானது, சுமார் 617 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.பி. 1400 களிலே) இருந்த சோழர்கள் காலத்தில் தோன்றி, அவர்கள் பணியால் வளர்ச்சியடைந்து, பின்னர் தஞ்சை நாயக்க மன்னர்களால் வளர்க்கப்பட்டு அதன் பின்னர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களால் வளர்ச்சியுற்று, இன்று பன்மொழிச் சுவடிகளும், காகிதத்தில் எழுதிய நூல்களும், ஓவியங்களும் கொண்ட ஓர் ஒப்பரிய நூலகமாகத் திகழ்கின்றது என‌ கூறுகின்றனர்.

  மேலும், கல்வெட்டில் கிடைத்துள்ள ஆதாரங்களின் படி இந்நூலகம் முதலில் சரசுவதி பண்டாரகம், புத்தகப் பண்டாரம் எனவும் இந்நூலகத்தில் பணி புரிந்தவர்கள் சரசுவதி பண்டாரிகள் எனவும் வழங்கப்பட்டனர் எனவும் கி.பி 1122 முதலே இருந்ததற்கான அடிக்கோள்கள் உள்ளன.

  இந்த நூலகத்தின் சிறப்புகள் :

  இங்குத் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன் (இடாய்ச்சு), இலத்தீன், கிரேக்கம் முதலிய பல மொழிகளிலுள்ள ஓலைச்சுவடிகளும், கையெழுத்துப்பிரதிகளும், அச்சுப்பிரதிகளும் உள்ளன. அதுமட்டுமின்றி வரலாறு, மருத்துவம், அறிவியல், இசை, நாட்டியம், சிற்பம், மதம், தத்துவம் முதலிய பல கலைகளில் சிறந்த நூல்கள் இங்கு உள்ளன.

  16, 17 நூற்றாண்டுகளில் தஞ்சையை ஆண்ட நாயக்க அரசர்கள் சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் நூல்களைப் கொண்டு வந்து சேர்த்தனர் எனவும் கூறினார்கள்.

  சரஸ்வதி நூலகம் என அழைக்கப்பட காரணம் :

  இரண்டாம் சரபோசி 1820 ஆம் ஆண்டு காசிக்கு சென்றபோது, ஏராளமான சமற்கிருத நூல்களை கொண்டு வந்து சேர்த்தார். மேலும், இவர் காலத்தில், மேனாட்டு மொழியிலான 5,000 அச்சுப்புத்தகங்களும், பல சிறந்த ஓவியங்களும் சேர்க்கப்பட்டன. ஆகையால் தான், இந்நூலகம் சரபோசி சரசுவதி மகால் நூல்நிலையம் இன்றுவரை அழைக்கப்படுகிறது.

  இந்த நூலகத்தின் மேலும் தனி சிறப்புகள்:

  1807-இல் கிழக்கிந்தியக் கம்பெனியாரால் நிறுவப்பெற்ற சரபோசி மன்னரின் உருவச்சிலை அழகாக அமைந்துள்ளது. மேலும், 1871-ல் அரசாங்கத்தால் நூல் நிலையத்திலுள்ள நூல்களின் பட்டியொன்றை தயாரிக்குமாறு இடாக்டர் பரனெல் என்னும் நீதிபதியை நியமித்தது.

  அவர் இந்த நூல் நிலையத்தை உலகத்தில் உள்ள முக்கியமான நூல் நிலையமாகவும் மிகப்பெரிய நூல் நிலையமாகவும் அறிவித்தார்.

  பிறகு 1918 ஆம் ஆண்டு தஞ்சை மராட்டிய மன்னரின் சந்ததியர், தமது சொந்த உடைமையாக்கி, இந்நூலகத்தை அரசாங்கத்திடம் ஒப்புவித்தனர்.

  இந்த நூலகமானது, இப்பொழுது தமிழ்நாடு அரசால் மேலாண்மை செய்யப்படுகிறது.

  இந்த நூலகத்தில் இருக்கும் நூல்கள் மற்றும் முக்கியமான அம்சங்கள்:

  இங்கு ஏறத்தாழ 25,000 சமற்கிருத நூல்கள், பதினொரு இந்திய மொழிகளில் உள்ளன. மேலும், வரலாற்றுப் புகழ்வாய்ந்த கை யெழுத்தாலான அஞ்சல் மடல்களும், அவற்றுடன் படங்களும், இருக்கின்றன.

  400 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நந்திநாகரி என்னும் எழுத்தில் உள்ள சுவடிகள் உள்ளன. 300 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி, திருவாசகம், திவாகரம், கலிங்கத்துப்பரணி, கம்பராமாயணம், திருக்குறள் முதலிய நூல்களும், இன்னும் ஆயிரக்கணக்கான நூல்களும் நடப்பிலிருக்கும் அனைத்து வகையான எண்ணற்ற நூல்களும் இங்கு இருக்கிறது எனவும் கூறுகிறார்கள்.

  இந்த நூலகத்திற்கு அதிகம் வருபவர்கள் யார் யார்?

  இந்த நூலகத்திற்கு அதிக அளவில் கல்லூரி மாணவர்களும் மற்றும் போட்டி தேர்வுகள் எழுதும் மாணவர்களும் அதிகளவில் வந்து படித்து செல்கிறார்கள். மட்டுமல்லாமல் வயதானவர்களும் ஆசிரியர்களும் அவ்வப்போது வந்து படித்துச் செல்கிறார்கள், நூலகம் ஏன்றாலே பொதுவாக அமைதியான நிலையில் இருக்கும்.

  கிட்டத்தட்ட 600 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த நூலகத்திற்கு வந்தாலே மகிழ்ச்சியாகவும் அமைதியான ஒரு மன நிலையாக இருக்கிறது எனவும் கூறினான்கள்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  Published by:Karthick S
  First published:

  Tags: Tanjore, Thanjavur