ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

கரண்ட் பில் கட்டலைன்னா மின்சாரம் துண்டிப்பா... மின்சார வாரியம் விளக்கம்

கரண்ட் பில் கட்டலைன்னா மின்சாரம் துண்டிப்பா... மின்சார வாரியம் விளக்கம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அனுப்பப்பட்டதாக குறுஞ்செய்தி ஒன்று அண்மை காலமாக பரவி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    கரண்ட் பில் கட்டலைன்னா மின்சாரம் துண்டிக்கப்படும் என தகவல் பரவிவரும் நிலையில் இது குறித்து மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அனுப்பப்பட்டதாக குறுஞ்செய்தி ஒன்று அண்மை காலமாக பரவி வருகிறது. அதில்,  ‘அன்பார்ந்த நுகர்வர்களே கடந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை செலுத்தவில்லை என்பதால் உங்களின் மின் இணைப்பு இன்று இரவு 10.30 மணி முதல் துண்டிக்கப்படும்.

    மேலும் தகவல்களுக்கு 06201314601 என்ற எண்ணில் மின்சார வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளவும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் பொதுமக்கள் இடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியமான  TANGEDCO தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில், நுகர்வோர் கவனத்திற்கு, இந்த போலியான குறுஞ்செய்தி பரவி வருகிறது. இது போன்ற குறுஞ்செய்தி ஒருபோதும் எங்களிடமிருந்து வராது. பொருட்படுத்தாதீர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    Published by:Murugesh M
    First published:

    Tags: EB Bill, Power cut, TANGEDCO