தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான இலுப்பையடி தர்மராஜா திரௌபதி அம்மன் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ காயத்திரி காளியம்மனுக்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் காப்பு கட்டி திருநடன திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பேரிடர் காரணமாக திருவிழா நடைபெறவில்லை.
இந்நிலையில், இவ்வாண்டுக்கான விழா கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி ஞாயிறு அன்று காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஸ்ரீ காயத்திரி காளியம்மன் திருநடன திருவீதியுலா இன்று நாதஸ்வர மேளதாள மங்கல வாத்தியங்கள் முழங்க, திருக்கோயில் வளாகத்தில் இருந்து துவங்கியது.
இதற்கு முன்னதாக ஏராளமான பெண்கள் தாய் வீட்டு சீதனமாக தேங்காய், பழங்கள், பூக்கள், பூ மாலைகள் கொண்ட வரிசை தட்டுக்கள் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து கோயிலில் இருந்து வெளியே வந்த காயத்திரி காளியம்மனை கோயில் சன்னதி முன்பு சுற்றிலும் கூடியிருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்காண பக்தர்கள் நான்கு புறமும் சூழ்ந்து நின்று பூமாரி பொழிந்தனர்.
Also see... பேஷன் ஷோவில் ராம்ப் வாக் நடந்த போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..
பின்னர் காளியம்மனுக்கு மலர் மாலைகள் அணிவித்தும், காளியம்மனை உற்சாகமாக வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து காளியம்மன் லட்சுமி விலாஸ் தெரு, உப்புக்காரத்தெரு, ஆயிக்குளம் சாலை, ஹாஜியார் தெரு என நான்கு வீதி சந்திப்பில், திருநடனம் புரிந்தார்.
அப்போது, திருநடனம் புரிந்து வீதியுலாவாக வந்த ஸ்ரீ காயத்திரி காளியம்மனை ஏராளமானோர் தரிசனம் செய்தும், அவரிடம் பிராத்தனைகள் செய்தும் வழிபட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 12ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை காயத்திரி ஜபம், மூலமந்திர ஜபமும், அதனை தொடர்ந்து பல்வேறு மூலிகை பொருட்களை கொண்டு ஸ்ரீ காயத்திரி ஹோமமும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadi, Kumbakonam