ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

அம்மிக்கல்லை தலையில் போட்டு தந்தையை கொன்ற மகன்.. தஞ்சையில் அதிர்ச்சி!

அம்மிக்கல்லை தலையில் போட்டு தந்தையை கொன்ற மகன்.. தஞ்சையில் அதிர்ச்சி!

மகன் - தாய் - தந்தை

மகன் - தாய் - தந்தை

Thanjavur murder | தினமும் குடித்துவிட்டு தாயிடம் தகராறு செய்து வந்ததால் ஆத்திரத்தில் மகன் தந்தையை கொலை செய்தார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

தஞ்சாவூர் அருகே குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த தந்தையை, குழவிக்கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டை அம்மாகுளம் பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி (55) கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் இவரது மனைவி அமுதா மற்றும் மகன் சின்னத்துரையுடன் (24) தனியாக வீட்டில் வசித்து வந்தார்.இவர்களது மகன் சின்னத்துரை தஞ்சையில் உள்ள மருந்து கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் சின்னதம்பி வேலைக்கு சென்று அதில் வரும் வருமானத்தை முழுவதும்  குடித்துவிட்டு, வீட்டிற்கு பணம் தராமல் மனைவியிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி கணவன், மனைவியை இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தகராறின் போது சின்னதம்பி மனைவியை அடித்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு சின்னத்தம்பி தன் மனைவியிடம் மீண்டும் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். இதை சின்னத்துரை கண்டித்துள்ளார். இருப்பினும் மீண்டும் குடித்து விட்டு வந்து வீட்டில் சின்னத்தம்பி தகராறு செய்து மனைவியை தாக்கியுள்ளார். இதனால் தந்தைக்கும்  மகனுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க | மனைவி, 3 மகள், 1 மகனை வெட்டிக் கொன்று இளைஞர் தற்கொலை.. செங்கம் அருகே பயங்கரம்.!

இந்நிலையில் தந்தை இப்படி தொடர்ந்து குடிப்பதும், தகராறு செய்வதுமாக இருப்பதால் ஆத்திரமடைந்த மகன் சின்னதுரை, இன்று அதிகாலையில் வீட்டின் முன் பகுதியில் தூங்கிகொண்டிருந்த தனது தந்தையின் தலையில் குழவிக்கல்லை  போட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த சின்னத்தம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சின்னத்தம்பியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சின்னத்துரையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Local News, Murder, Thanjavur