ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழியர்களை அலறவிட்ட பாம்பு... - தஞ்சையில் பரபரப்பு

சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழியர்களை அலறவிட்ட பாம்பு... - தஞ்சையில் பரபரப்பு

பதிவாளர் அலுவலகத்தில் பாம்பு

பதிவாளர் அலுவலகத்தில் பாம்பு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சார்பதிவாளர் அலுவலகத்தின் உள்ளே புகுந்த பாம்பால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்பு பாம்பு கிடைக்காததால் தீயணைப்பு துறையினர் திரும்பினர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலகத்தை சுற்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காவல் நிலையம், நீதிமன்றம், சார்நிலை கருவூலம், தீயணைப்பு நிலையம், சார் பதிவாளர் அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த பகுதியை பொறுத்தவரை நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கானோர் அலுவலக வேலைகளுக்காக வந்து செல்லக்கூடிய பகுதியாகும்.

இந்தப் பகுதியில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரிகள் காலையில் பணியில் ஈடுபட்டு இருந்த போது, திடீரென அலுவலகத்தில் உள்ளே பாம்பு ஒன்று புகுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு சார் பதிவாளர் அலுவலகத்தின் அதிகாரிகள் கொடுத்த தகவலின் பெயரில், விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் சார் பதிவாளர் அலுவலகத்தின் உள்ளே அமைந்துள்ள அறைகள் முழுவதும் பாம்பு எங்கே இருக்கின்றது என்று தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

Also see... Gold Rate | உயர்ந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?

சுமார் 2 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு பாம்பு கிடைக்காததால் தீயணைப்புத் துறையினர் அங்கிருந்து திரும்பினர். இதனால் அலுவலகத்தில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அலுவலகப் பணிகள் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் அலுவலகப் பணிகளை தொடங்கினர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Snake, Thanjavur