முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / கும்பகோணம் : பைக்கில் புகுந்த நல்ல பாம்பு.. போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்..

கும்பகோணம் : பைக்கில் புகுந்த நல்ல பாம்பு.. போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்..

பைக்கில் புகுந்த பாம்பு குட்டி

பைக்கில் புகுந்த பாம்பு குட்டி

Thanjavur News : கும்பகோணத்தில் மோட்டார் சைக்கிளில் புகுந்த நல்ல பாம்பு குட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kumbakonam, India

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேம்பாலம் அருகே உள்ள சாந்தி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் தனது வீட்டின் முன் தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். 

அப்போது சாலை ஓரம் வந்த நல்ல பாம்பு குட்டி இவரது மோட்டார் சைக்கிளில் ஏறி உள்ளது. இதனை பார்த்த ரவிச்சந்திரன் பாம்பை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனாலும் அவரால் பாம்பை விரட்ட முடியவில்லை. பின்னர் மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த நல்ல பாம்பு குட்டி வெளியேறாததால் தீயணைப்பு படையினருக்கு தகவல் தரப்பட்டது.

அதன்படி அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் பைக்கில் பாம்பு இருப்பதை உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து மோட்டார் மெக்கானிக் வரவழைக்கப்பட்டு பைக்கின் ஒவ்வொரு பாகங்களாக கழட்டப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு நல்ல பாம்பு குட்டி உயிருடன் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேல் நிலவிய பரபரப்பு ஓய்ந்தது.

First published:

Tags: Local News, Snake, Tamil News, Tanjore