ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

தஞ்சையில் பேருந்தை வழிமறித்த போதை கும்பல்.. தட்டிக்கேட்ட ஓட்டுநர் மீது சரிமாரி தாக்குதல் - 6 பேருக்கு வலைவீச்சு

தஞ்சையில் பேருந்தை வழிமறித்த போதை கும்பல்.. தட்டிக்கேட்ட ஓட்டுநர் மீது சரிமாரி தாக்குதல் - 6 பேருக்கு வலைவீச்சு

பேருந்து ஓட்டுநர் மீது போதை கும்பல் தாக்குதல்

பேருந்து ஓட்டுநர் மீது போதை கும்பல் தாக்குதல்

கும்பலின் சரமாரி தாக்குதலில் ஓட்டுநர் கார்த்திக் தலையில் படுகாயம் ஏற்பட்டு அவருக்கு ஆறு தையல் போடப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kumbakonam, India

  தஞ்சையில் மினி பேருந்தை வழிமறித்து அதன் ஓட்டுனரை கண்மூடித்தனமாக தாக்கிய ஆறு பேர் கும்பலை காவல்துறையினர் தேடிவருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்கு  நேற்று மாலை  தனியார் மினி பேருந்து சென்றுள்ளது. அந்த மினி பேருந்தை ஓட்டுனர் கார்த்திக் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பேருந்து சுங்காங்கேட் அருகே சென்றபோது சாலையில் நின்றிருந்த கும்பல் மினி பேருந்து செல்ல வழி விட மறுத்து நின்றது.

  அவர்களை தாண்டி செல்ல ஓட்டுநர் தொடர்ந்து ஹாரன் ஒலி எழுப்பியுள்ளார். பேருந்தை மறித்த கும்பல் மதுபோதையில் இருந்துள்ளது. ஓட்டுநர் ஹாரன் ஒலி எழுப்பியதால் ஆத்திரம் அடைந்த கும்பல் பேருந்தில் இருந்து ஓட்டுனரை கீழே இறக்கி கண்மூடித்தனமாக தாக்கியுள்ளது. கும்பலின் சரமாரி தாக்குதலில் ஓட்டுநர் கார்த்திக் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தலையில் ஆறு தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

  இதையும் படிங்க: கார் சிலிண்டர் வெடித்து இறந்த ஜமேஷா முபினின் சிசிடிவி காட்சி.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

  இச்சம்பம் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஓட்டுநரை தாக்கிய ஆறு பேர் கொண்ட கும்பல் தலை மறைவாகியுள்ள நிலையில் அவர்களை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது.

  செய்தியாளர் - எஸ்.குருநாதன், தஞ்சாவூர்

  Published by:Kannan V
  First published:

  Tags: Attack, Kumbakonam, Mini bus, Tanjore