ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

தஞ்சையில் நைட்டி கொள்ளையர்கள் அட்டகாசம்.. வீட்டின் கதவை உடைக்க முடியாததால் சிசிடிவி கேமராவை உடைத்து அட்டூழியம்

தஞ்சையில் நைட்டி கொள்ளையர்கள் அட்டகாசம்.. வீட்டின் கதவை உடைக்க முடியாததால் சிசிடிவி கேமராவை உடைத்து அட்டூழியம்

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

Tanjore News : வீட்டின் கதவை உடைக்க முடியாத ஆத்திரத்தில், கண்காணிப்பு கேமராவை உடைத்து சென்ற நைட்டி கொள்ளையர்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை பகுதி ரியாஸ் நகரில் சின்னதுரை என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று பணி முடித்து விட்டு தனது மனைவியுடன் மாடியில் உறங்கியுள்ளார். வழக்கம்போல் காலை எழுந்து வீட்டு வாசலை திறந்து பார்த்தபோது கண்காணிப்பு கேமரா சேதமடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது நைட்டி போட்டு கொண்டு ஒரு மர்ம நபரும், அரைக்கால் டவுசர் போட்டிருந்த மற்றொரு நபரும் வீட்டின் கதவை உடைத்துச் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் வீட்டின் கதவை கொள்ளையர்களால் உடைக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இதுகுறித்து சின்னதுரை தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க : “தினமும் குடிச்சிட்டுதான் வண்டி ஓட்றேன்..இன்னைக்கு ஏன் புடிக்கிறீங்க’ - சினிமா பெண் டான்சர் போலீசிடம் வாக்குவாதம்

மேலும் இப்பகுதியில் இரவு நேரங்களில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே இப்பகுதியில் காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும், காவல் உதவி மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

First published:

Tags: Cyber crime, Local News, Tanjore