முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / எடப்பாடி பழனிசாமியால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது - புகழேந்தி விமர்சனம்

எடப்பாடி பழனிசாமியால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது - புகழேந்தி விமர்சனம்

புகழேந்தி

புகழேந்தி

Thanjavur | ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சையில்  செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, ”எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலகத்திற்குள் சென்றது தவறு. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் , ஈ.பி.எஸ் இணை ஒருங்கிணைப்பாளர் இல்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்தின் உரிமையாளர், அதிகாரம் பெற்றவர் ஓபிஎஸ். அவரை கேட்காமல் சென்றது தவறு என்று இதுகுறித்து டிஜிபியிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது இவர் எப்படி உள்ளே சென்றார் ”என கேள்வி எழுப்பினார்.

பின்னர் அதனைத் தொடர்ந்து பேசியவர்,” அதிமுக அலுவலகத்திற்குள் செல்வதற்காக பாதுகாப்பு கேட்டோமே தவிர, ஓபிஎஸ் கழகப் பணிகளை மேற்கொள்ள எப்பொழுது வேண்டுமானாலும் உள்ளே செல்வார். நாங்களும் செல்வோம். யாராலும் தடுக்க முடியாது” என தெரிவித்தார்.

Also see... திமுக எம்.எல்.ஏ.க்கள் தன்னுடன் பேசுவதாக இபிஎஸ் காமெடி

பின்னர்,” இங்கிலாந்து இளவரசி இறந்து நான்கு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்டுகிறது. நான்கு நாட்களுக்கு பிறகு சென்று அந்த காலி இடத்தை வேண்டுமானால் எடப்பாடியும், ஜெயக்குமாறும் நிரப்பலாமே தவிர அவர்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது” என புகழேந்தி கூறினார்.

First published:

Tags: ADMK, Edappadi Palanisami, Jayakumar, Pugazhendhi, Thanjavur