முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / 120 கிலோ எடை.. 6 அடி உயரம்.. தஞ்சையில் விஜய் - அஜித் கேக்!

120 கிலோ எடை.. 6 அடி உயரம்.. தஞ்சையில் விஜய் - அஜித் கேக்!

அஜித் - விஜய் உருவ கேக்குகள்

அஜித் - விஜய் உருவ கேக்குகள்

Ajith - Vijay : நடிகர்கள் அஜித் - விஜய் உருவங்களில் ஆன ஆளுயர கேக்குகளை தஞ்சையில் ஒரு தனியார் பேக்கரி தயாரித்துள்ளது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் உருவத்தில் செய்யப்பட்டுள்ள ஆளுயர கேக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தனியார் பேக்கரி ஒன்றில் கேக் திருவிழா கண்காட்சி நடைபெற்றது. ரோல் கேக், பிளம் கேக், பிளாக்பாரஸ்ட், ஃபிரஷ் கிரீம் கேக் உட்பட 100க்கும் மேற்பட்ட வகையிலான கேக் ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதில், 120 கிலோ எடையில் 6 அடி உயரத்தில் நடிகர்கள் விஜயும், அஜித்தும் இணைந்து நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்த கேக் பார்வையாளர்களை கவர்ந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள பேக்கரி கூட்டமைப்பு மற்றும் ரோட்டரி சங்கம் நிர்வாகிகளும், பொதுமக்களும் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர்.

First published:

Tags: Actor Ajith, Actor Vijay, Local News, Thanjavur