ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

தங்கம் வைரம் புதையல் குவியல்.. 50 - 50 டீல்..! - லட்சங்களை சுருட்டிய கோவில் பூசாரி

தங்கம் வைரம் புதையல் குவியல்.. 50 - 50 டீல்..! - லட்சங்களை சுருட்டிய கோவில் பூசாரி

பூஜை செய்வதற்காக மூன்று லட்சம் ரூபாய் செலவு ஆகும் என கூறியுள்ளார். புதையல் ஆசையால் பூசாரி கூறுவதை நம்பி ராஜ்குமாரும் பணத்தை கொடுத்துள்ளார்.

பூஜை செய்வதற்காக மூன்று லட்சம் ரூபாய் செலவு ஆகும் என கூறியுள்ளார். புதையல் ஆசையால் பூசாரி கூறுவதை நம்பி ராஜ்குமாரும் பணத்தை கொடுத்துள்ளார்.

பூஜை செய்வதற்காக மூன்று லட்சம் ரூபாய் செலவு ஆகும் என கூறியுள்ளார். புதையல் ஆசையால் பூசாரி கூறுவதை நம்பி ராஜ்குமாரும் பணத்தை கொடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur | Tamil Nadu

தஞ்சாவூரில் 57 தலங்களில் நீராடி, புனித நீர் எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்தால் புதையல் எடுத்து தருவதாக கூறி பலரிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்த சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மதுக்கூர் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் கோவில் வளாகத்தில் அவருக்கு ஒரு வீட்டை கிராம மக்கள் கொடுத்துள்ளனர். இந்த வீட்டில் வசித்து வரும் ரமேஷ்குமார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அவர் வீட்டில் இருந்தப்படியே பல ஆண்டுகளாக குறி சொல்லி வருகிறார்.

இந்நிலையில் பல பேரிடம் தங்க புதையல் எடுத்து தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார் என அவர் மீது புகார் எழுந்துள்ளது. இதேபோல் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் (29) கூறுகையில், கடந்த 2019 ஆம் ஆண்டு தனது நண்பர் மூலம் கறி விருந்திற்கு ஒக்கநாடு கீழையூர் வந்ததாகவும், அதன் மூலம் கோயில் பூசாரி ரமேஷ்குமாருடன்  பழக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அப்போது அவர் தனக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது.

உங்கள் வீட்டில் தங்கம் - வைரம் உள்ளிட்ட விலை மதிப்பில்லா புதையல் உள்ளது. இதற்கு ராஜ்குமாரிடம் சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மேலும் பூஜை செய்வதற்காக மூன்று லட்சம் ரூபாய் செலவு ஆகும் என கூறியுள்ளார். புதையல் ஆசையால் பூசாரி கூறுவதை நம்பி ராஜ்குமாரும் பணத்தை கொடுத்துள்ளார்.

மேலும் கிடைக்கும் புதையலில் தனக்கு பாதி தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதனையடுத்து பூஜைக்காக 57 தீர்த்தங்களில் நீராடி அந்த புனித நீரை கொண்டு வந்து சிறப்பு பூஜைகள் செய்தால் தங்களுக்கு புதையல் கிடைக்கும்  எனவும் கூறியுள்ளார். இதனை நம்பிய ராஜ்குமார்  57 ஊர்களுக்கு சென்று புனித நீர் எடுத்து வந்து கொடுத்துள்ளார். இதனையடுத்து கோயிலில் உள்ள சிலைகளையும் - சூலத்தையும் வைத்து பூஜை செய்து கிடா வெட்டுகளையம் நடத்தியுள்ளார். ஆனால் பூஜை செய்து பல நாட்கள் ஆகியும் புதையல் கிடைக்காததால் அவரிடம் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். ஆனால் பூசாரியோ  பணத்தை தரமால் ஏமாற்றி வந்துள்ளார். இதனையடுத்து சாமியார் ரமேஷ்குமார் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | பந்த், கல்வீச்சு எதிரொலி : தமிழகம் - புதுச்சேரி பேருந்துகள் நிறுத்தம்?

இந்நிலையில் இந்த சாமியார் மீது சென்னை சேர்ந்த ஒரு பெண் 23 லட்சம் வரை மோசடி செய்ததாக புகார் அளித்தார். அப்போது  ஊரில் உள்ள சில முக்கியர்கள் அந்த பூசாரிக்கு ஆதரவாகவும், காவல்துறையினர் உதவியுடன் பேசி அந்த புகாரை வாபஸ் பெற செய்தனர். இதுவரை அந்த சாமியார் மீது பாதிக்கப்பட்டவர்கள் 5 பேர் ஒரத்தநாடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை வழக்கு பதிவு செய்யாமல் உள்ளூர் பிரமுகர்கள் அந்த சாமியரை காப்பாற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது.

Published by:Anupriyam K
First published:

Tags: Cheating, Crime News, Thanjavur