ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

தஞ்சாவூா் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின் தடை - இதில் உங்கள் ஏரியா இருக்கிறதா?

தஞ்சாவூா் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின் தடை - இதில் உங்கள் ஏரியா இருக்கிறதா?

மின் தடை

மின் தடை

Thanjavur District | தஞ்சாவூா் மாவட்டத்தில் நாளை (புதன் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூா் மாவட்டம் வீரமரசன் பேட்டை துணை மின்நிலையத்தில் நாளை (21-12-2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அங்கே மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின்தடை பகுதிகள்:

வீரமரசன் பேட்டை துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பூதலூர், செல்லப்பன் பேட்டை, மருதக்குடி, புதுப்பட்டி, ஆவாரம்பட்டி, முத்துவீரகண்டியன்பட்டி, வெண்டையம் பட்டி, நந்தவனப்பட்டி, அய்யனாபுரம், இந்தளுர், சோளகம் பட்டி, ஒரத்தூர், பூதராயநல்லூர், சாமிநாதபுரம், சிவசாமி புரம், மோசஸ்புரம், விண்ணமங்கலம், அடஞ்சூர், மாதுரான்புதுக்கோட்டை, முல்லைக்குடி, தீட்ச சமுத்திரம், தொண்டராயன்பாடி, ஆற்காடு மற்றும் சித்திரக்குடி ஆகிய பகுதிகளில் நாளை மின் வினியோகம் இருக்காது.

Must Read : ‘உத்தரவு பெட்டி’... திருப்பூர் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - சிறப்புகள் என்ன?

அதேபோல, திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வல்லம், வல்லம்புதூர், மொனையம் பட்டி, குருவாடிப்பட்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வளம்பகுடி, ராயமுண்டான்பட்டி, ராயராம்பட்டி, சாணுரப்பட்டி, ஆச்சம் பட்டி, பாளையப்பட்டி, அள்ளூர், அளிச்சக்குடி, அம்மையகரம், தென்னகுடி, பிள்ளையார் நத்தம், சர்க்கரை நத்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளம் பெரம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Thanjavur