கும்பகோணம் அருகே மேலகாவிரியை சேர்ந்த இந்து முன்னணி மாநகர செயலாளர் சக்கரபாணி வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், சந்தேகம் காரணமாக சக்கரபாணி, அவரது மனைவி மாலதி ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், சக்கரபாணி விளம்பரத்திற்காக தன் வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசி நாடகம் ஆடியது அம்பலமானது. மேலும், பெட்ரோல் குண்டு தயாரிக்கப்பட்ட பொருள்களும், சக்கரபாணி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களும் ஒரே மாதிரியாக இருந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட எஸ்பி ரவளி பிரியா, ஏ டி எஸ் பி சுவாமிநாதன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைத்து சோதனை செய்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பாஜக வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார், கும்பகோணம் இந்து முன்னணி பொறுப்பாளர் வேதா, பாஜக வழக்கறிஞர் பிரிவு சுரேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து சென்றனர்.
Also see... Tamil News Live: தமிழ்நாட்டில் 10 மணிக்குள் 10 மாவட்டங்களில் மழை!
இதையடுத்து அவர் மீது நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ள நிலையில், அவரை கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bomb, Hindu Munnani, Thanjavur