ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

பட்டுக்கோட்டை சாமியாரை நிர்வாணமாக ஓடவிட்ட சிங்கப்பூர் சாமியார்..! - அப்படி என்ன பஞ்சாயத்து?

பட்டுக்கோட்டை சாமியாரை நிர்வாணமாக ஓடவிட்ட சிங்கப்பூர் சாமியார்..! - அப்படி என்ன பஞ்சாயத்து?

பட்டுக்கோட்டை சாமியார்

பட்டுக்கோட்டை சாமியார்

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சாமியார் ஒருவர், தன்னை தொழில்போட்டி காரணமாக பிற சாமியார்கள் சிங்கப்பூரில் நிர்வாணமாக்கி தாக்கினார்கள் என பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pattukkottai, India

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கார்காவயல் கிராமத்தில் அமைந்துள்ளது சிவசக்தி சித்தர் பீடம். இங்கு இருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருபவர் ராஜ்குமார் என்கிற ருத்ர சித்தர். இவர் ஆரம்பகால கட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதன் பின்பு ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு  ஆன்மீக குருக்கள் சித்தர்கள் உள்ளிட்டவர்களை நாடிச் சென்று அவர்களிடம் இருந்து ஆன்மீக கருத்துக்களை கேட்டறிந்து அதன்படி ஆன்மீகப் பணியில் தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக சித்தராக மாறி தற்போது ருத்ர  சித்தராக  தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு நோய், குழந்தையின்மை மற்றும் அனைத்து கஷ்டங்களுக்கும்   தீர்வு பெற்று தருவதாக தினந்தோறும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இவரை நாடி வருகின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் இவர் நிர்வாண சாமியாக இருந்தவர் தற்போது அதை சற்று மாற்றிக் கொண்டு சிகப்பு நிறத்திலான வேட்டி மற்றும் துண்டு மட்டுமே அணிந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்.

ருத்ர சித்தர் ருத்ர தாண்டவம்

ஒவ்வொரு அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளில் இவர் சிறப்பு யாகம்  நடத்துவது வழக்கம்.  அந்த அம்மாவாசை மற்றும் பௌர்ணமி யாகத்தின் போது ருத்ர சித்தர் ருத்ர தாண்டவம் ஆடி யாகத்தை நடத்துவார் . ஒரு சில நேரத்தில் திடீரென அக்னி குண்டத்துக்குள் இறங்கியும் ருத்ர தாண்டவம் ஆடி பக்தர்களுக்கு அதிர்ச்சி ஊட்டுவார். சில நேரங்களில்  திடீரென அவர் எழுந்து சென்று சுடுகாட்டில் நின்று அங்கு இருக்கும் சாம்பலை தலையில் கொட்டி ஆக்ரோஷமாக சாமி ஆடுவார்.

மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அங்குள்ள மக்கள்  அழைத்துச் செல்லும் அளவிற்கு பிரபலமான சித்தராக வலம்  வருவதாக இங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.  தன்னை நாடி வருபவர்களுக்கு உள்ள  கஷ்டங்கள் அனைத்தையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் தீர்த்து வைப்பதாகவும் உலகின் பல்வேறு நாடுகளுக்கு தான் சென்று பக்தர்களின் கஷ்டங்களை தீர்த்து வைப்பதோடு அவர்களுக்கு எல்லாவிதத்திலும் துணை நிற்பதாகவும் இந்த ராஜ்குமார் என்கின்ற ருத்ர சித்தர் தெரிவிக்கின்றார்.

இதையும் படிங்க: ”என் மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மிதான்” வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர்..!

தன்னைப் பற்றி ஒரு சிலர் அவதூறு பரப்பி வந்தாலும் தன்னால் பலன் அடைந்தவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். அதன்படி தான் உலகம் முழுவதும் செல்ல போவதாகவும் உலகம் முழுவதும்  தனக்கு பக்தர்கள் உள்ளனர். இது இறைவன் தனக்கு அளித்த வரம் என்றார்.

நிர்வாணமாக ஓடவிட்ட குண்டு சாமியார்:

இந்த சாமியார் அண்மையில் பக்தர்களின் அழைப்பை ஏற்று மலேசியா சென்றார். அப்போது அங்குள்ள லோக்கல் சாமியாருக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த குண்டு சாமியார் இவரை தாக்கி வேட்டியை உருவி நிர்வாணமாக்கியுள்ளார். இதனால் நிர்வாணமாக வெளியே வந்த ருத்ர சாமியார் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்ட காட்சிகள் சமூக வளைதலங்களில் வேகமாக பரவியது. இது குறித்து சாமியாரிடம் கேட்டப்போது மலேசியாவில் தனக்கு பக்தர்கள் நாளுக்கு நாள் அதிமாகி தனது புகழ் அங்கு பரவுவதால், உள்ளூர் சாமியாரான அவருக்கு பிடிக்கவில்லை. தொழில் போட்டியால் இந்த தாக்குதல் நடைபெற்றதாக தெரிவித்தார்.

Published by:Kannan V
First published:

Tags: Singapore, Tanjore