மகளின் திருமண அழைப்பிதழில், தன் ஊர் மக்கள் அனைவரின் பெயர்களையும் ஊராட்சி மன்ற தலைவர் அச்சடித்து வழங்கியது, அந்த ஊர் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அருகே உள்ள மல்லபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு மன்ற தலைவராக ரமேஷ் என்பவர் உள்ளார்.
இரண்டாவது முறையாக மீண்டும் இவரே சுயேட்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது ஊராட்சியில் மல்லபுரம், கச்சுகட்டு, திருமலைராஜபுரம், கீழ திருமலைராஜபுரம், வில் வேலங்குடி ஆகிய கிராமங்களை உள்ளடக்கி 900 குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் இவரது மகள் ஷாலினி கைலாஷ் திருமண விழா வருகிற 24-ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற உள்ளது.
இதற்காக திருமண அழைப்பிதழ் அச்சடித்த ரமேஷ், அதில் ஊர் மக்களின் பெயர்களையும், உறவினர்களின் பெயர் போல் அச்சடித்து அனைவருக்கும் வழங்கி வருவது ஆச்சியத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள 900 குடும்பத்தினருக்கும் வீடு வீடாக சென்று தனது மகளின் திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகிறார். அவர் அளித்துள்ள திருமணஅழைப்பிதழில் 900 குடும்பத்தின் தலைவர் மற்றும் தலைவி பெயர்களை, தங்கள் நல்வரவை விரும்பும் உறவினர்கள் என அச்சடித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் கொடுத்த பத்திரிக்கையை பார்த்த ஊர் மக்கள், ஆச்சரியப்படுவதுடன் உறவினர்களே அழைப்பிதழ்களில் பெயர் போடுவதற்கு யோசிக்கும் இந்த காலகட்டத்தில் ஜாதி, மதம் கட்சி என எவ்வித பாகுபாடின்றி ஊர் மக்கள் அனைவரின் பெயரையும் தனது குடும்ப திருமண அழைப்பிதழில் அச்சடித்து அனைவரும் ஒரே குடும்பம் என்ற மகிழ்ச்சியை தந்துள்ளார்.
இந்த திருமணம் எங்களுடைய வீட்டில் நடப்பது போல் எங்கள் பெயரையும் பத்திரிக்கையில் போட்டது தங்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக என இவ்வூர் மக்கள் ஊராட்சி மன்ற தலைவரை பாராட்டி வருகிறனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thanjavur