தஞ்சாவூர் அருகே முன்னையம் பட்டியில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், கடந்த வாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி சேமிப்புக் கிடங்களில் நெல் மூட்டை நனைந்து விட்டதாக அறிக்கை வெளியீட்டு இருந்தார். ஆனால் இங்கு நாங்கள் வந்து ஆய்வு செய்தபோது, நெல்லின் ஈரம் 17% வரை இருக்கலாம் ஆனால் இங்கு 14.5% மட்டுமே நெல் ஈரமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தற்போது 10,000 மெட்ரிக் டன் நெல்லை உடனடியாக அரவை ஆலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். மேலும் தற்போது மழை காலம் தொடங்க உள்ள காரணத்தினாலும், விவசாயிகள் ஒரே நேரத்தில் அறுவடை செய்ய உள்ளதாலும் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், கூடுதலாக ஒரு நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனால் தற்போது ஒரு நாளைக்கு 1,000 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், கூடுதலாக 1,000 மூட்டைகள் அதாவது ஒரு நாளைக்கு 2,000 நெல் மூட்டைகளை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனடியாக அரவை ஆலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஆட்சியில் 378 அரவை ஆலைகள் இருந்ததாகவும், தற்போது அதனை 658 ஆலைகளாக உயர்த்தியுள்ளோம் என்று கூறினார். ஆனால் கடந்த காலங்களில் நெல் சாகுபடி என்பது குறைந்த அளவே இருந்ததாகவும், இப்போது 1,70,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே எந்தாண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
நெல் உற்பத்தி அதிகமாக வர இருப்பதால், அதனை கருத்தில் கொண்டு, தனியார் பங்களிப்போடு தமிழகத்தில் சுமார் 13 இடங்களில் அரவை ஆலைகள் அமைக்க உள்ளதாகவும், முதற்கட்டமாக ஆறு ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனவே விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்து அரவை ஆலைகளுக்கு அனுப்பினால், இதுபோல் திறந்தவெளிகளில் சேமித்து வைக்க கூடிய சூழ்நிலை ஏற்படாது. நெல்மணிகள் சேதமாகவும் வாய்ப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.