ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

'முடி வெட்ட முடியல.. மளிகை பொருள் கிடைக்கல..' தஞ்சாவூரில் தீண்டாமை.. ஒருவர் கைது!

'முடி வெட்ட முடியல.. மளிகை பொருள் கிடைக்கல..' தஞ்சாவூரில் தீண்டாமை.. ஒருவர் கைது!

கைதான சலூர் கடைக்காரர்

கைதான சலூர் கடைக்காரர்

தீண்டாமை பிரச்சினை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கிளாமங்கலம் கிராமத்தில், டீ கடைகளில் இரட்டை குவளை முறையும், முடித்திருத்தும் கடையில் ஆதி திராவிடர் சமூக மக்களுக்கு முடி திருத்தம் செய்யாமலும் பல ஆண்டுகளாக தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த அக்.2ம் தேதி ஒரத்தநாடு தாசில்தாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து கிராம அலுவலர் ஆய்வு செய்து தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்து அறிக்கை அளித்துள்ளார். அதன் பிறகு இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த மாற்று சமூகத்தினர், பட்டியல் இன மக்கள் யாருக்கும் மளிகைக் கடைகளில் பொருள் வழங்கக் கூடாது, முடிதிருத்தம் செய்யக்கூடாது என கிராம கட்டுப்பாடு விதித்துள்ளதாக கூறினர். மேலும், ஆதிதிராவிடர் தெருவுக்கு குடிநீர் வராமல் தடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மளிகை கடையில், ஆதி திராவிடர் சமுகத்தை சேர்ந்த ஒருவர் பெட்ரோல் கேட்கும் போது உங்களுக்கு தரக் கூடாது என கிராமத்தில் தடை விதித்து இருப்பதாக மளிகை கடைக்கார் கூறும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகியது.

Also see...  சரிந்த மைக்.. எம்.எல்.ஏ.வின் உதவியாளரை தாக்கிய அமைச்சர் நாசர்!

இது தொடர்பாக ஒரத்தநாடு தாசில்தார் சுரேஷ் கிளாமங்கலம் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஒரத்தநாடு வட்டாட்சியர் சுரேஷ் மற்றும் ஒரத்தநாடு துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணை அடிப்படையில் பட்டியல் இன மக்களுக்கு முடி திருத்தம் செய்யாமல் கடையை மூடி சென்ற சலூன் கடை உரிமையாளர் வீரமுத்து என்பவர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

செய்தியாளர் : எஸ்.குருநாதன், தஞ்சாவூர்

First published:

Tags: Thanjavur