தஞ்சாவூர் மாவட்டம மெலட்டூர் அருகே ஏரவாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜன்(62). இவர் அந்த பகுதியில் பலகார கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், இவருடைய கடைக்கு 9ம் வகுப்பு மாணவி கடந்த 2021ம் ஆண்டு பலகாரம் வாங்குவதற்காக வந்தாள். அப்போது நாகராஜன் அந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதை யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மாணவியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் பாபநாசம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை தஞ்சை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சுந்தர்ராஜன், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நாகராஜனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 1½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் அரசு தரப்பில் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
செய்தியாளர் : குருநாதன் - தஞ்சாவூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Tanjore