Home /News /thanjavur /

கும்பகோணம் மாநகராட்சியில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசிய கொடி... சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ

கும்பகோணம் மாநகராட்சியில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசிய கொடி... சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ

 தலைகீழாக ஏற்றப்பட்ட தேசிய கொடி

தலைகீழாக ஏற்றப்பட்ட தேசிய கொடி

Kumbakonam | கும்பகோணத்தில் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் முதல் மேயர் கே.சரவணன்,  துணை மேயர் சு.ப.தமிழழகன் மற்றும் ஆணையர் செந்தில் முருகன் முன்னிலையில் தேசிய கொடியினை ஏற்றினார்.

அப்போது தேசிய கொடி மேலே ஏற்றப்பட்ட பிறகு தான் கொடி தலைகீழாக இருப்பதை அறிந்தனர். உடனடியாக அருகில் இருந்த துணை மேயர் தமிழழகன் கொடியை விரைவாக கீழே இறக்கி அவசர அவசரமாக சரியான முறையில் கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் மாநகராட்சி ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தேசிய கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், முதல் மேயரான காங்கிரஸ் கட்சியின் கே. சரவணன், தலைகீழாக கொடியேற்ற காரணமாக இருந்த சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also see... சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடிய அரசுப் பள்ளி

75ஆவது ஆண்டு நிறைவு சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Independence day, Kumbakonam

அடுத்த செய்தி