ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

குடும்ப தகராறில் நேர்ந்த விபரீதம்: 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற தாயும் தற்கொலை..!

குடும்ப தகராறில் நேர்ந்த விபரீதம்: 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற தாயும் தற்கொலை..!

தற்கொலை செய்த தாய்

தற்கொலை செய்த தாய்

Thanjavur | பட்டுக்கோட்டை அருகே, குடும்பத்தகராறில் 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலடிக்குமுளை புதுநகரை சேர்ந்தவர் ஜான்ராஜ். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த மாலதியும் (22) காதலித்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தர்ஷன்(2) என்ற மகன் இருந்தான்.

இந்நிலையில், கடந்த ஓராண்டாக ஜான்ராஜ் கூலி வேலைக்கு செல்லாமல், வீட்டில் இருந்து வந்தார். இதனால் குடும்பத்தில் போதிய வருமானம் இல்லாத நிலையில், மாலதி மகளிர் சுய உதவிக் குழு மூலம் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

இதையடுத்து போதிய வருமானம் இல்லாத நிலையில், அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி, நிதி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை காலதாமதமாக செலுத்தி வந்துள்ளார். இதனால் ஜான்ராஜூக்கும், மாலதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நிதி நிறுவனத்துக்கு செலுத்த பணம் இல்லாத சூழலில், மாலதி மிகவும் மன உளைச்சலில் கடந்த இரண்டு நாட்களாக இருந்துள்ளார்.

வழக்கம் போல  காலை கணவன், மனைவியிடையே மீண்டும் நிதி நிறுவனத்துக்கு பணம் செலுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாலதி வீட்டில் இருந்த தென்னை மரத்துக்கு வைக்கும் குருணை மருந்தை தனது மகனுக்கு கொடுத்து கொன்று விட்டு,  அவரும் சாப்பிட்டு உள்ளார். பின்னர் மாலதி வீட்டில் சத்தம் போட்டுள்ளார்.

Also see... பாஜக பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல்...

இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் விஷமருந்திய மாலதியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து மாலதியின் தந்தை மகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில்,  பட்டுகோட்டை தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Commit suicide, Crime News, Thanjavur