Home /News /thanjavur /

பூண்டி மாதா பேராலயத்தில் வெகு விமர்சையாக நடந்த மாதா பிறப்பு பெருவிழா தேர்பவனி..

பூண்டி மாதா பேராலயத்தில் வெகு விமர்சையாக நடந்த மாதா பிறப்பு பெருவிழா தேர்பவனி..

பூண்டி மாத பேராலயம்

பூண்டி மாத பேராலயம்

Thanjavur | மாதா பிறப்பு திருவிழாவை முன்னிட்டு, தேர் பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது. பசிலிக்கா அந்தஸ்து பெற்ற இந்த ஆலயத்தில் ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட மரத்துண்டின் ஒரு பகுதி இக்கோவிலில் பக்தர்களின் அருளிக்கமாக வைக்கப்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டை சேர்ந்த கான்ஸ்டன்டைன் பெஸ்கி என்ற வீரமாமுனிவரால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் மாதா பிறப்பு பெருவிழா கடந்த 30ந்தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார தேர்பவனி வெகுசிறப்பாக நடைபெற்றது.

மல்லிகை பூ மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதா சொரூபம் வைக்கப்பட்டு குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோனிசாமி புனிதம் செய்து அலங்கார தேர்பவனியை தொடங்கி வைத்தார். அப்போது அங்கு கூடி இருந்த ஏராளமான பக்தர்கள் மரியே வாழ்க என பக்தி கோஷமிட்டு மாதாவை வழிபட்டனர்.

Also see... 25 வயதில் அரியாசனம்.. 15 பிரதமர்களை கண்ட எலிசபெத் 2ம் ராணி

அதனைத்தொடர்ந்து வாண வேடிக்கைகளும் நடைபெற்றது. இந்த தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று பின்னர் கோவிலை வந்தடைந்தது. இதில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Christ Church, Poondi, Thanjavur

அடுத்த செய்தி