Home /News /thanjavur /

தஞ்சையில் சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது...

தஞ்சையில் சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது...

கைதான குமார்

கைதான குமார்

Thanjavur | தஞ்சை அருகே வேலைக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கியவரை போக்சோவில் போலீஸார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
தஞ்சை அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் குமார் (வயது 42). இவர் பெண்கள் பலரை மில் வேலைக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிகிறது. அதில் சிறுமி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியிருப்பது தெரியவந்துள்ளாது. 

சில மாதங்களுக்கு முன் சிறுமியை ஆறுமுகம் (வயது 42) என்பவர் திருமணம் செய்துள்ளார். அப்போது  சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த ஆறுமுகம் சிறுமி கழுத்தில் கட்டி இருந்த தாலியை கழட்டி கொண்டு சிறுமியை அவருடைய பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி உள்ளார். சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அப்போது சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இத்தகவல் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பு மூலம் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ்  சப்இன்ஸ்பெக்டர் சாந்தி  மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த ஆறுமுகத்தை கடந்த மாதம் கைது செய்தனர்.

Also see... காட்டெருமையை வேட்டையாடி வீட்டில் தோரணமாக தொங்கவிட்ட இளைஞர்கள்

சிறுமியை கர்ப்பமாக்கிய குமார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த குமாரை போலீஸார்  தஞ்சை அருகே பிடித்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Arrested, Crime News, Pregnant, Sexual harrasment, Thanjavur

அடுத்த செய்தி