ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் - தஞ்சாவூரில் போக்குவரத்து மாற்றம்

மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் - தஞ்சாவூரில் போக்குவரத்து மாற்றம்

போக்குவரத்தில் மாற்றம்

போக்குவரத்தில் மாற்றம்

Thanjavur District | தஞ்சாவூர் சாந்தப்பிள்ளை கேட் மேம்பாலத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக அந்த பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மேரீஸ்கார்னர் பகுதியில் ரயில்வே கீழ்பாலம் இருக்கிறது. இந்த பாலத்தில் மழைகாலத்தில் தண்ணீர் தேங்குவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்துவருகிறது. இந்த வழியாக நாகை, திருவாரூர், வேளாங்கண்ணி, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும், வாகனங்கள் தஞ்சாவூர் நகருக்குள் வந்து சாந்தப்பிள்ளை கேட் மேம்பாலம் வழியாக புதிய பேருந்து நிலையம் சென்று வந்தன.

அதேபோல, புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் இந்த பாலத்தின் வழியாகவே சென்று வந்தன. இந்நிலையில், பாலத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதையடுத்து பாலத்தில் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாதவாறு பாரிகாடு வைக்கப்பட்டுள்ளன. மேலும் தொம்பன்குடிசை பகுதியில் போக்குவரத்து காவலர்கள், அந்த வழியாக வரும் வானங்களை வேறு பாதையில் மாற்றி விட்டுகின்றன.

Must Read : மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

இந்நிலையில், 3 நாட்களில் இந்த பாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் நிறைவடையும் என்றும், அதன் பின்னர் வாகனங்கள் வழக்கம் போல இந்த மேம்பாலம் வழியாகவே இயக்கப்படு என்றும், அதுவரை மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Thanjavur, Traffic