முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / அஜித்தின் துணிவு படத்துக்கு அழைத்து செல்லாத விரக்தியில் +2 மாணவி தற்கொலை.. படம் முடிந்து வீடு திரும்பிய பெற்றோர் அதிர்ச்சி

அஜித்தின் துணிவு படத்துக்கு அழைத்து செல்லாத விரக்தியில் +2 மாணவி தற்கொலை.. படம் முடிந்து வீடு திரும்பிய பெற்றோர் அதிர்ச்சி

துணிவு போஸ்டர்

துணிவு போஸ்டர்

Kumbakonam News | பள்ளியில் தேர்வு இருந்ததால் பெற்றோர்கள் துணிவு படத்திற்கு அழைத்துச் செல்லாத விரக்தியில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த மாணவி மனமுடைந்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kumbakonam, India

கும்பகோணத்தில், துணிவு படத்திற்கு அழைத்து செல்லாமல், பெற்றோர்கள் மட்டும் படத்திற்கு சென்றதால் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் முத்தய்யபிள்ளை மண்டபம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். சுரேஷ் திருப்பனந்தாள் பேரூராட்சி உறுப்பினராக உள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள துணிவு திரைப்படத்திற்கு குடும்பத்துடன் செல்வதாக இருந்தனர்.

இந்நிலையில் 2வது மகள் சிவமகா, 12ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று சிவமகாவிற்கு தேர்வு என்பதால், வீட்டில் படிக்குமாறு கூறிவிட்டுவிட்டு சுரேஷ், விஜயசித்ரா மற்றும் மூத்த மகளான அருள் பரணிக்கா ஆகிய மூன்று பேரும் துணிவு திரைப்படத்திற்கு சென்றுள்ளனர். படம் முடிந்து வீட்டுக்கு வந்து வீட்டின் கதவை வெகு நேரமாகி தட்டியபோதும் சிவமகா கதவை திறக்கவில்லை. இந்நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில்  சிவமகா தூக்கில் தொங்கியவாறு இருந்ததை பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக சிவமகாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிவமகா ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாச்சியார்கோவில் போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து காவல்துறை விசாரணை செய்ததில், அஜித் படத்திற்கு சிறுமியை விட்டுச் சென்றதால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Crime News, Kumbakonam, Student Suicide, Thanjavur