ஹோம் /நியூஸ் /Thanjavur /

பெற்றோர்களே உஷார்... குழந்தைகள் நம் கண் முன் விளையாடினாலும் கவனம் தேவை... கிரில் கேட்டில் குழந்தை தலை சிக்கி பரிதவிப்பு

பெற்றோர்களே உஷார்... குழந்தைகள் நம் கண் முன் விளையாடினாலும் கவனம் தேவை... கிரில் கேட்டில் குழந்தை தலை சிக்கி பரிதவிப்பு

. கிரில் கேட்டில் குழந்தை தலை சிக்கி பரிதவிப்பு

. கிரில் கேட்டில் குழந்தை தலை சிக்கி பரிதவிப்பு

தஞ்சை அருகே கும்பகோணத்தில் மாடி வீட்டில் இருந்த தடுப்பு கிரிலில் ஒன்றரை வயது ஆண் குழந்தையின் தலை சிக்கியதை அடுத்து பொதுமக்கள் உதவியுடன் குழந்தை மீட்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்  தாராசுரம், அண்ணா சிலை அருகே மாடி வீட்டில் வசிக்கும் விஜய் ஆனந்த் - கீர்த்திகா தம்பதியினரின் ஒன்றரை வயது ஆண் குழந்தையான ஹரி பிரியன். இன்று காலை  மாடியில் உள்ள தாழ்வார பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்து இரும்புகிரிலில், குழந்தையின் தலை பகுதி சிக்கியது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் அந்த காட்சியை பார்த்து அதிர்ந்தனர். இவர்களின் சத்தத்தை கேட்டு அவ்வழியாக சாலையில் சென்றோர் பலரும் இதனைப் பார்த்து திடுக்கிட்டனர், ஒருவர் அவசர அவசரமாக ஆஷா பிளேடு கொண்டு வந்து கிரில் கம்பி ஒன்றை அறுத்து குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினார்,

Also Read : சென்னை ஓஎம்ஆர் சாலையில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு

இதற்கிடையே குழந்தையை ஒருவர் பிடித்துக் கொள்ள மற்ற இருவர்  கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தையை மீட்க இரு கம்பிகளையும் வெளிப்புறமாக இழுத்து விலகியதால் குழந்தைகளை பத்திரமாக  வெளியே எடுத்தனர். கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

பயந்துபோன குழந்தையை தாய் தூக்கி ஆறுதல் படுத்தினார் இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் நிம்மதி அடைந்துனர். என்ன தான் குழந்தைகள் நம் கண் முன் விளையாடி கொண்டிருந்தாலும் பெற்றோர்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு பாடமாக அமைந்துள்ளது.

First published:

Tags: Kumbakonam, Tanjore