Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

சுவாமிமலை முருகன் கோயிலில் இன்று தேரோட்டம்..

சுவாமிமலை முருகன் கோயிலில் இன்று தேரோட்டம்..

சுவாமி மலை

சுவாமி மலை

Karthigai deepam 2022 | சுவாமிமலை சுவாமிநாத சாமி திருக்கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை அருள்மிகு சுவாமி நாதசாமி திருக்கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா நவம்பர்  28ம் தேதி தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் காலை கொடியேற்றமும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பரிவாரங்களுடன் படி இறங்கி உற்சவ மண்டபம் எழுந்தருதல் நிகழ்ச்சியும் இரவு திருவீதி உலாவும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மறுநாள் நவ 29ம் தேதி முதல் 1ம் தேதி முடிய காலை படிச்சட்டத்திலும் இரவு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெற்று வந்தது. தொடர்ந்து டிசம்பர் 2ம்  தேதி அன்று காலை சுவாமி படிச்சிட்டத்திலும் இரவு பஞ்ச மூர்த்திகளுடன் 5 சப்பரத்திலும் எழுந்து திருவீதி உலா நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இன்று 6-ம் தேதி திருக்கார்த்திகை தினத்தன்று காலை ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர் .   தங்கமயில் மற்றும் வெள்ளி மயில் வாகனத்தில் இன்று இரவு சுவாமி புறப்பாடு நடைபெற்று கார்த்திகை தீபம் ஏற்றி திருவீதியில் சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Also see... Karthigai Deepam Live: திருவண்ணாமலையில் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்படுகிறது மகா தீபம்..

கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் சாமிமலை காவல்துறை ஆய்வாளர் சிவா செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Car Festival, Karthigai Deepam, Local News, Murugan temple, Tamil News