ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

தஞ்சாவூர் வீட்டு வசதி பிரிவில் குடியிருப்பை பெற்றவர்களுக்கு வட்டி சலுகை

தஞ்சாவூர் வீட்டு வசதி பிரிவில் குடியிருப்பை பெற்றவர்களுக்கு வட்டி சலுகை

வீட்டு வசதி குடியிருப்பு

வீட்டு வசதி குடியிருப்பு

Thanjavur District | தஞ்சாவூரில் வீட்டு வசதி பிரிவில், குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்ற அனைத்து ஒதுக்கீடுதாரர்களுக்கும் வட்டி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதமை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பபட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் வீட்டு வசதி பிரிவிற்கு உட்பட்ட அனைத்து குடியிருப்புகளில் (சுயநிதி திட்டம் மற்றும் வணிக மனைகள் நீங்கலாக) ஒதுக்கீடு பெற்ற அனைத்து ஒதுக்கீடுதாரர்களுக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணையின்படி அரசாணை (நிலை) எண்.194 வீ.வ.ம.ந.பு.வ. ( நி.எ.2(1) துறை நாள் 4-11-2022-ன் படி வட்டி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தஞ்சாவூர் வீட்டு வசதி பிரிவிற்கு உட்பட்ட அனைத்து குடியிருப்புகளில் (சுயநிதி திட்டம் மற்றும் வணிக மனைகள் நீங்கலாக) ஒதுக்கீடு பெற்ற அனைத்து ஒதுக்கீடுதாரர்களுக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணையின்படி அரசாணை (நிலை) எண்.194 வீ.வ.ம.ந.பு.வ. ( நி.எ.2(1) துறை நாள் 4-11-2022-ன் படி வட்டி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட சலுகைகளை பெற ஒதுக்கீடு தாரர்களால் ஆறு மாத காலத்திற்குள் அதாவது அடுத்த ஆண்டு மே மாதம் 3ஆம் தேதிக்குள் நிலுவைத்தொகை ஒரே தவணையாகவோ அல்லது நிலுவையில் உள்ள அசல் தொகைக்கு நடைமுறையில் உள்ள தனி வட்டியுடன் மூன்று தவணைகளிலோ செலுத்த வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மாதத் தவணைக்கான அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி, வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி முழுமையாக தள்ளுபடி, நிலத்திற்கான இறுதி விலை வித்தியாசத் தொகையில் ஒவ்வொரு ஆண்டும் 5 மாத வட்டி தள்ளுபடி ஆகிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Must Reads : சாபங்கள் நீங்க குமரியில் வழிபடவேண்டிய குகநாதீஸ்வரர் கோவில் - முருகன் தோஷம் நீங்க சிவனை வழிபட்ட தலம்

எனவே ஒதுக்கீடு தாரர்கள் நிலுவைத் தொகையை செலுத்தி வட்டி சலுகையை பயன்படுத்தி கிரைய பத்திரம் பெற்று பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த சலுகையானது வட்டி தள்ளுபடி திட்டம் அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஆறு மாத காலங்கள் (3-5-2023) வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என தெரிவித்துக்கொள்ளப்படுவதாக தஞ்சாவூர் வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Thanjavur