ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

தனி நபர் கடன்கள் வாங்க போறீங்களா?... தஞ்சை மக்களுக்கு இதோ குட் நீயூஸ்!

தனி நபர் கடன்கள் வாங்க போறீங்களா?... தஞ்சை மக்களுக்கு இதோ குட் நீயூஸ்!

தனிநபர் கடன்

தனிநபர் கடன்

Thanjavur District | தஞ்சாவூர் மாவட்டத்தில் தனிநபர் கடன் பெறப் போகிறவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மாவட்ட நிர்வாகம்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை மாவட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான (விராசத் கடன் திட்டம்), கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது, கடன் பெறும் பயனாளிகளுக்கான ஆண்டு வருமானம், கடன் தொகை, வட்டி விகிதம் ஆகியவற்றில் கீழ்கண்டவாறு தளர்வுகளை நடைமுறைப்படுத்தி பயனாளிகளின் எண்ணிக்கையினை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கைவினை கலைஞர்களுக்கு (விராசாத் கடன்) திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000- க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப வருமானம் ரூ.8,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். கைவினை கலைஞர்களுக்கு திட்டம் 1-ன் கீழ் ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000 வழங்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 6 சதவீதம், பெண்களுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00.000- கடன் வழங்கப்படுகிறது. எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை வருமானச் சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்றுக் கொள்ளலாம்.

Must Read : சுருளி அருவி தெரியும்... இந்த சின்ன சுருளி அருவி தெரியுமா!? - தேனியில் மிஸ் பண்ணக்கூடாத அழகான இடம்!

மேலும், தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தினை நேரில் அணுகி அல்லது தொலைபேசி எண். 04362-278416 மற்றும் மின்னஞ்சல் dbcwo.tntnj@gmail.com மூலமாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Loan, Local News, Thanjavur