ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

காவி உடையில் அம்பேத்கர்.. சித்தரித்து போஸ்டர் ஒட்டிய இந்து முன்னணி நிர்வாகி கைது!

காவி உடையில் அம்பேத்கர்.. சித்தரித்து போஸ்டர் ஒட்டிய இந்து முன்னணி நிர்வாகி கைது!

இந்து முன்னணி போஸ்டர்

இந்து முன்னணி போஸ்டர்

அம்பேத்கருக்கு பட்டை- குங்குமமிட்டு காவி உடைபோட்டு அவரை அவமதித்துள்ளவர்களை கைது செய்ய வேண்டும் - திருமாவளவன்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kumbakonam, India

காவி உடையில் அம்பேத்கர் இருப்பது போல சித்தரித்து கும்பகோணத்தில் சுவரொட்டி ஒட்டிய இந்து முன்னணி நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்தனர்.

அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, இந்து மக்கள் கட்சியினர் ஒட்டிய போஸ்டர்களில், காவி சட்டை அணிந்து, விபூதி பூசியவாறு அம்பேத்கர் இருப்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. கும்பகோணம் நகர்பகுதி முழுவதும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட நிலையில், பல இடங்களில் அவை கிழிக்கப்பட்டது.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட விசிக தலைவர் திருமாவளவன், பார்ப்பனீய மனுஸ்மிருதி மேலாதிக்கத்தை இறுதிவரை எதிர்த்து, 10 லட்சம் பேருடன் இந்து மதத்திலிருந்து வெளியேறிய அம்பேத்கரை இழிவுபடுத்தும் விதமாக சுவரொட்டி ஒட்டப்பட்டதாக குறிப்பிட்டார்.

மேலும் சிவன், விஷ்ணு, பிரம்மா முதலிய கடவுள்களை வணங்கமாட்டேன் என உறுதிமொழியேற்ற புரட்சியாளர் அம்பேத்கருக்கு பட்டை- குங்குமமிட்டு காவி உடைபோட்டு அவரை அவமதித்துள்ளவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் சுவரோட்டியை ஒட்டிய இந்து முன்னணி நிர்வாகி குருமூர்த்தி கும்பகோணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

First published:

Tags: Ambedkar, Hindu Munnani, Thirumavalavan, VCK