1,829 கோடி ரூபாய்க்கான நெடுஞ்சாலை துறை ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் நெடுஞ்சாலை கோட்டத்தில் உள்ள சாலைகளை, 2010 முதல் 2021 வரை பராமரிக்க ஆர். ஆர். இன்பிரா, கேசிபி என்ஜினியர்ஸ், ஜெ.எஸ்.வி இன்பிரா ஆகிய 3 நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இம்மூன்றும், அதிமுக தலைவர்களுக்கு நெருக்கமானவர்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள் ஆகும். இந்த ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்துள்ளதாக 2020 ஆம் ஆண்டே அறப்போர் இயக்கம் புகார் அளித்தது. ஒப்பந்தம் கொடுக்கப்பட்ட விதத்தில் குளறுபடி, குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சலுகை காட்டியது என ஒப்பந்த முறைகேடுகள் ஆட்சி மாற்றத்திற்கு பின் விஸ்வரூம் எடுத்தது. இந்த விவகாரத்தில் ஒப்பந்தம் விட்ட அதிகாரியான திருச்சி கண்காணிப்பு பொறியாளராக இருந்த பழனி தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
பழனி, தற்போது சென்னை திட்டங்கள் வட்ட கண்காணிப்பு பொறியாளராக இருக்கும் நிலையில் அந்த பதவியில் இருந்து பணியிடை நீக்கம் செய்து, நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தஞ்சாவூர் நெடுஞ்சாலை துறையில் 692 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்தது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த காலத்தில் பழனி தஞ்சாவூர் நெடுஞ்சாலைதுறை கண்காணிப்பு பொறியாளராக இருந்த போது இந்த ஊழல் புகார் எழுந்தது. முதற்கட்டமாக தமிழக அரசு இவரை பணிய்டை நீக்கம் செய்திருப்பதை அறப்போர் இயக்கம் ஜெய்ராம் வரவேற்றுள்ளார்.
மேலும், நெடுஞ்சாலைத் துறையில் ரூ.1829 கோடி மதிப்புள்ள 3 ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாக புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.